ஹிந்தியில் ரீமேக் ஆகும் மாநாடு திரைப்படம்! ஹீரோவாக நடிக்கும் ராணா டகுபதி!!

0
121

ஹிந்தியில் ரீமேக் ஆகும் மாநாடு திரைப்படம்! ஹீரோவாக நடிக்கும் ராணா டகுபதி!!

 

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாகவும் ஹிந்தியில் ரீமேக் ஆகும் மாநாடு திரைப்படத்தில் நடிகர் ராணா டகுபதி நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் சிலம்பரசன் டிஆர் நடிப்பில் உருவான திரைப்படம் மாநாடு. இந்த திரைப்படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர் கருணாகரண், எஸ் ஜே சூரியா, எஸ்.ஏ சந்திரசேகர், பிரேம்ஜி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

மாநாடு திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசையமைத்திருந்தார். வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பாக சுரேஸ் காமாட்சி அவர்கள் மாநாடு திரைப்படத்தை தயாரித்திருந்தார்.

 

மாநாடு திரைப்படம் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதி பல முறை தள்ளிவைக்கப்பட்டு இறுதியாக நவம்பர் 2021ம் ஆண்டு வெளியானது. மாநாடு திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த திரைப்படம் 117 கோடி ரூபாய் வசூல் செய்தது. இதையடுத்து மாநாடு திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

அதாவது மாநாடு திரைப்படத்தின் ஹிந்தி மற்றும் தெலுங்கு ரீமேக் உரிமையை நடிகர் ராணா அவர்களின் குடும்பத்தினர் 12 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாகவும் சிலம்பரசன் வேடத்தில் நடிக்க முன்னணி நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடப்பதாகவும் தகவல் வெளியானது. மேலும் ஹிந்தி ரீமேக்கில் நடிகர் வருண் தவான் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது.

 

தற்பொழுது மாநாடு திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகர் ராணா டகுபதி நடிக்கவிருப்பது உறுதியாகி விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகர் ரவிதேஜா அவர்களிடம்  பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் ஹிந்தியில் ரீமேக் ஆகும் மாநாடு திரைப்படத்தை இயக்குநர் பிரவீன் சத்தா இயக்கவுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

 

இன்னும் தெலுங்கு மொழியில் ரீமேகில் உருவாகவுள்ள மாநாடு திரைப்படத்தில் யார் நடிப்பார் என்று தெரியவில்லை. ஆனால் மாநாடு திரைப்படத்தின் ஹிந்தி மற்றும் தெலுங்கு ரீமேக் படத்தின் படப்பிடிப்பை ஒரே நேரத்தில் தொடங்க வேண்டும் என்று திட்டமட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

Previous articleகோழிக் குழம்புக்கு பதிலாக கத்தரிக்காய் குழம்பு! மனைவியை கொன்ற கணவன்!!
Next articleMBBS, BDS கலந்தாய்வு அறிவிப்பு!! வீட்டிலிருந்தே கலந்து கொள்ளலாம்!!