விஜய் நடித்த தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்! பிரபல நடிகர் வருண் தவான் நடிப்பதாக தகவல்!!

0
161

விஜய் நடித்த தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்! பிரபல நடிகர் வருண் தவான் நடிப்பதாக தகவல்!!

 

நடிகர் விஜய் நடித்து வெளிவந்த தெறி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் படத்தில் நடிகர் வருண் தவான் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் அட்லீ கூட்டணியில உருவாகி 2016ம் ஆண்டு தெறி திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் நடிகர் விஜய் அவர்களுக்கு வசூல் ரீதியாகவும், மக்கள் மத்தியிலும் ஒரு வெற்றி படமாக அமைந்தது.

 

தெறி திரைப்படத்தில் நடிகை சமந்தா, நடிகர் பிரபு, நடிகர் மொட்டை ராஜேந்திரன், நடிகை எமி ஜாக்சன், நடிகை ராதிகா சரத்குமார், மறைந்த இயக்குநர் நடிகர் மகேந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்த தெறி திரைப்படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரித்தார்.

 

தெறி திரைப்படம் ஏற்கனவே தெலுங்கு மொழியில் உஷ்டாத் பகத் சிங் என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகின்றது. தெறி திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் பவன் கல்யான் நடிக்க இயக்குநர் ஹரிஷ் சங்கர் இயக்குகிறார். இந்த நிலையில் தெறி திரைப்படம் ஹிந்தி மொழியில் ரீமேக் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

ஹிந்தியில் உருவாகப் போகும் தெறி திரைப்படத்தில் நடிகர் வருண் தவான் நடிக்கப் போகிறார். இந்த திரைப்படம் நடிகர் வருண் தவான் அவர்கள் நடிக்கும் 18வது திரைப்படமாக உருவாகவுள்ளது. தெறி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்குநர் அட்லீ அவர்கள் பிரபல தயாரிப்பாளர் முராத் கெதானி அவர்களுடன் சேர்ந்து தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

நடிகர் வருண் தவான் நடிக்கும் தெறி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் திரைப்படத்தை இயக்குநர் காளிஸ் இயக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இயக்குநர் காளிஸ் தமிழில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான கீ திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தெறி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாகவும் இந்த ஷூட்டிங் 2024ம் ஆண்டு மே மாதம் வரை நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே போல மே மாத இறுதியில் படத்தை வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது.

 

Previous articleஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக் குழு தலைவர்! இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அஜித் அக்ரகார் தேர்வு!!
Next articleமின்வேலி அமைக்கப் போகின்றீர்களா ??இனிமேல் இதுதான் ரூல்ஸ் தமிழக அரசு அதிரடி!!