மின்வேலி அமைக்கப் போகின்றீர்களா ??இனிமேல் இதுதான் ரூல்ஸ் தமிழக அரசு அதிரடி!!

0
51
are-you-going-to-build-an-electric-fence-from-now-on-these-are-the-rules-tamilnadu-government-is-taking-action
are-you-going-to-build-an-electric-fence-from-now-on-these-are-the-rules-tamilnadu-government-is-taking-action

மின்வேலி அமைக்கப் போகின்றீர்களா ?? இனிமேல் இதுதான் ரூல்ஸ் தமிழக அரசு அதிரடி!! 

மின்வேலி அமைப்பது தொடர்பாக புதிய ஒழுங்கு முறை நடவடிக்கைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வனவிலங்குகளை பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது பற்றி வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

தற்போது வனவிலங்குகளை பாதுகாக்க தமிழக அரசு  ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து உயர் மின்னழுத்த மின் வேலிகளால் ஏற்படும் மின்விபத்துகளால்  யானை உள்பட வனவிலங்குகள் மின்சாரம் தாக்கி இறக்கும் நிகழ்வுகள் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. அதனால் வனவிலங்குகளை பாதுகாக்க மின் வேலிகளை அமைப்பதற்கு தரப்படுத்தப்பட்ட அளவுகோலுடன் கூடிய விதிமுறைகளை நிர்ணயிப்பது அவசியமான ஒன்றாகி விட்டது. அதே சமயம் காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில், வனவிலங்குகளால் சேதமடையும் விவசாய விளைபொருட்களைப் பாதுகாத்து விவசாயிகளின் நலன்களையும் பேணிக் காப்பது  இன்றியமையாத ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த  தரப்படுத்தப்பட்ட விதிமுறைகள் விவசாயிகள் தங்கள் பயிரை பாதுகாப்பதற்கு உதவும். இதன் அடிப்படையில் முதல் முயற்சியாக, தமிழ்நாடு அரசு தமிழ்நாடு மின்வேலிகள் (பதிவு மற்றும் ஒழுங்குமுறை) விதிகளை அறிவித்து முறையான அரசு இதழில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது சூரியசக்தி மின்வேலிகள் மற்றும் மின்வேலிகள் அமைப்பதையும், ஏற்கனவே விவசாய நிலங்களை சுற்றி அமைக்கப்பட்ட மின்வேலிகளை பாதுகாத்து பதிவு செய்ய தரப்படுத்த மற்றும் ஒழுங்குபடுத்த போன்ற செயல்முறைகளுக்கு உதவும்.

மேலும் அடுத்ததாக சூரியசக்தி மின் வேலிகள் போன்ற மின் வேலிகள் அமைக்க முன் அனுமதி பெறுவது என்பது கட்டாயமாகிறது. அதேபோல் ஏற்கெனவே அமைக்கப்பெற்ற மின்வேலிகளை பதிவு செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் தமிழக அரசால் அறிவிப்பு செய்யப்பட்டு உள்ள காப்புக்காடுகளில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விவசாய நிலங்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக மின் வேலிகளை அமைக்கும் வணிகத்தில் உள்ள அனைத்து நிறுவன மின் வேலிகளும், விதிகளில் கூறப்பட்டுள்ள BIS தரநிலைகளான BIS-302-2-76 (இந்தியா) விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். மேலும் அறிவிக்கை செய்யப்பட்ட காப்புக்காட்டின் வனப்பகுதியில் இருந்து 5 கிமீ தொலைவுக்குள்  மின்வேலிகளை ஏற்கனவே அமைத்துள்ளவர்கள்,  வேலிகளை  மாவட்ட வன அலுவலரிடம் பதிவு செய்வது இனிமேல் கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விதிகள் வெளியிடப்பட்ட தேதியில் இருந்து ஏற்கனவே மின் வேலிகளை அமைத்துள்ள விவசாய நிலத்தின் உரிமையாளர் விதிகள் வெளியிடப்பட்ட அறுபது நாட்களில் மாவட்ட வன அலுவலரிடம் பதிவு சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பம் அளிக்க வேண்டும். வன அலுவலரிடம் அனுமதி கிடைத்ததும் 90 நாட்களுக்குள் மின் வேலி அமைத்து அதற்கான உறுதிமொழியுடன் மின்வெலியை பதிவு செய்ய விண்ணப்பம் அளிக்க வேண்டும். வனத்துறை மற்றும் மின்துறை அதிகாரிகளின் ஆய்விற்கு பின்னர் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மின்வெலிகளின் தரமானது பகுப்பாய்வு செய்யப்பட உள்ளது.

இவ்வாறாத செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.