வரலாற்று சிறப்புமிக்க கோவில் மூடப்பட்டது! அதிர்ச்சியில் பக்தர்கள்!
கொரோனா அதிக அளவு பரவுவதால் மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கூறினர்,அதில் மதம் சார்ந்த கூட்டங்கள் மற்றும் திருவிழாக்களுக்கு அனுமதி அளிக்கவில்லை.அதற்கடுத்து அதிக அளவு கூட்டம் கூடும் இடங்களுக்கு 50% மட்டுமே அனுமதி தந்துள்ளது.அந்தவகையில் திருமணங்களுக்கு 100 பேர் உட்பட்டவர்கள் மட்டும் கலந்துக்கொள்ள வேண்டும்,அதே போல் இறுதி சடங்கிற்கு 50 பேர் மட்டுமே கலந்துக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
கட்டுப்பாடுகளையும் மீறி அதிக அளவு கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருவதால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான புராதான சின்னங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டது.அதன்படி தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள 14 புராதான சின்னங்களை மறு உத்தரவு வரும் வரை மூடப்பட வேண்டும் என கூறியது.இது சம்மதமான கடிதம் இன்று காலை தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்தது.
அதற்கடுத்து கோவில் நிர்வாகிகள் கோவில் முன் தடுப்புகள் வைத்து அடைத்துள்ளனர்.தஞ்சை பெரிய கோவிலை காண வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு தடை விதித்துள்ளனர்.இத்தடையினால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் பெருமளவு வருத்தத்துடன் இருக்கின்றனர்.பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும் சுவாமிக்கு பக்தர்கள் இன்றி நான்கு கால பூஜை சிறப்பாக நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.