மாநாடு படத்தின் மாபெரும் வெற்றி!

0
80

மாநாடு படத்தின் மாபெரும் வெற்றி!

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மாநாடு.  இந்த படத்தில் நடிகர் சிம்புவுடன், எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சிம்புவின் திரை வாழ்வில் இது ஒரு முக்கியமான படமாக அமைந்தது. மேலும், சிம்புவிற்கு இந்த படம் கம்பேக் படமாகவும் அமைந்தது. மாநாடு படத்தை தொடர்ந்து தற்போது சிம்புவின் கைவசம்  “மஹா, வெந்து தணிந்தது காடு, பத்து தல மற்றும் கொரோனா குமார்” ஆகிய படங்கள் உள்ளன. தற்போது மாநாடு திரைபடம் வெளியாகி 100 நாட்களாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.

இந்த நிலையில், படம் 100 நாட்களாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருவதற்கு அதன் இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் சிம்பு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இந்த வெற்றியை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், மாநாடு திரைப்படம் விரைவில் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது. அதிலும் இயக்குனர் வெங்கட்பிரபுவே இயக்குவதாகவும், தெலுங்கு ரீமேக்கில் நடிகர் நாகசைதன்யா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சியும் மாநாடு திரைப்படம் நூறு நாட்கள் கொண்டாடியதை தொடர்ந்து, அதை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

author avatar
Parthipan K