குடித்து தகராறு செய்த கணவன் : மிளகாய்கொடி தூவி கொடூரமாக வெட்டி கொன்ற மனைவி!

0
106
குடித்து தகராறு செய்த கணவன் : மிளகாய்கொடி தூவி கொடூரமாக வெட்டி கொன்ற மனைவி!

குடித்து வீட்டில் டார்ச்சர் செய்து வந்த கணவரை மிளகாய் பொடி தூவி கொடூரமாக கொலை செய்த மனைவியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல் ( 37). இவரது மனைவி அழகுசின்னு (31).  சண்முகவேல் கூலித் தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். இவர்களுக்கு இரு குழந்தைகள் இருக்கின்றனர்.

சண்முகவேலுக்கு தினமும் மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறு செய்வதை சண்முகவேல் வழக்கமாக வைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சண்முகவேல் நன்றாக குடித்து விட்டு அழகுசின்னுவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இவரின் டார்ச்சர் தாங்க முடியாத அழகுசின்னு ஆத்திரமடைந்தார். வீட்டில் சமையல் அறையில் இருந்த மிளகாய்பொடியை எடுத்து வந்து சண்முகவேல் முகத்தில் தூவினார். அப்போது சண்முகவேல் எரிச்சல் தாங்க முடியாமல் கத்தி அலறினார்.

கோபம் அடங்காத அழகுசின்னு அரிவாளை எடுத்து வந்து சண்முகவேலை சராமரியாக வெட்டிச் சாய்த்தார். ரத்தம் சொட்ட, சொட்ட சண்முகவேல் சரிந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார்.

இவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம், பக்கத்தினர் சண்முகவேல் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சண்முகவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொடூரமாக கொலை செய்த மனைவி அழகுசின்னுவை கைது செய்தனர்.

Previous articleபிரசவ காலத்தில் மனைவியை கவனிக்க கணவருக்கு விடுமுறை வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் கருத்து!
Next articleஅரசியல் கட்சி தொடங்குவதற்கு முன் ஒரு அரசியல் படம் – விஜய்-யின் அடுத்த திட்டம்!!