நண்பரின் காதை கடித்த நண்பனின் வெறிச்செயல்! அதிர்ந்த ஊர்மக்கள்!

Photo of author

By Hasini

நண்பரின் காதை கடித்த நண்பனின் வெறிச்செயல்! அதிர்ந்த ஊர்மக்கள்!

Hasini

The hysteria of a friend biting a friend's ear! Shocked pigs!

நண்பரின் காதை கடித்த நண்பனின் வெறிச்செயல்! அதிர்ந்த ஊர்மக்கள்!

நண்பர்களுக்கு சிலர் எடுத்துக்கட்டாக வாழ்ந்து வருகின்றனர். என்னதான் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டாலும் மற்றவர்களிடம் நண்பனை விட்டு கொடுக்காதவர்களைதான் பார்த்து இருப்போம். ஆனால் இந்த நண்பர்களோ அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையின் தீவிரத்தின் காரணமாக என்ன செய்து உள்ளார்கள் பாருங்கள்.

மயிலாடுதுறை மாவட்டத்தில், குத்தாலம் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். 42 வயதான இவரும் அதே ஊரைச் சேர்ந்த சந்துரு என்ற ஞானஸ்கந்தனும் 40 வயதுடைய நபரும் நண்பர்கள். கடந்த 30-ஆம் தேதி இரவு டைல்ஸ் வேலைக்கு சென்றுவிட்டு  மீண்டும் வீடு திரும்பும்போது இருவருக்கும் இடையே தகராறு  ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மீண்டும் கடந்த 1ம் தேதி ஊர் முக்கியஸ்தர்கள், ஊர் தலைவர்கள் முன்னிலையில் இருவருக்கும் சமரசம் பேசும்போது பிரச்சினை ஏற்பட்டது. அதில் சந்துரு திடீரென ஆத்திரம் அடைந்து சிவகுமாரின் வலதுபக்க காதை கடித்து துப்பினார். இதைப் பார்த்த சிவக்குமாரின் உறவினர் கார்த்திகேயன் நடுவில் வந்து தடுத்தபோது சந்துரு கட்டையால் கார்த்திகேயனை தாக்கியுள்ளார். இதில் கார்த்திகேயனுக்கு மண்டையில் காயம் ஏற்பட்டு 3 தையல்கள் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிவகுமாருக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில், முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக கார்த்திகேயன் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த குத்தாலம் போலீசார் சந்துருவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.