திருமணம் செய்த பெண்ணை வெட்டிக் கொன்ற தந்தையின் வெறிச்செயல்!

Photo of author

By Hasini

திருமணம் செய்த பெண்ணை வெட்டிக் கொன்ற தந்தையின் வெறிச்செயல்!

தற்போது என்னதான் காலமெல்லாம் மாறி விட்டது என்று பலர் நினைத்தாலும், சிலர் ஜாதி, மதம் என சிலவற்றில் ஊறிதான் உள்ளனர். அவர்களை போன்றோரை எப்படியும் திருத்த முடியாது. அப்படி ஒரு காரணத்தினால், ஒரு பெண்ணை தன் சொந்த தந்தையே வெட்டி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை வந்தது.

தென்காசி மாவட்டத்தில், ஆலங்குளம் அருகே உள்ள தெற்கு காவலாகுறிச்சி பகுதியில், ஆர்.சி.சர்ச் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. 45 வயதான இவர் ஒரு கூலி தொழிலாளி. இவருக்கு பாக்கியலக்ஷ்மி என்ற மனைவியும், ஷாலோம் ஷீபா என்ற 18 வயது மகளும் இருந்தனர்.

ஷீபாவும், அதே பகுதியை சேர்ந்த முத்துராஜ் என்பவரும் காதலித்து வந்தனர். வீட்டில் பெற்றோர் சம்மதம் இல்லாமலேயே ஷீபாவும், முத்துராஜூம் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டனர். இதன் காரணமாக மாரிமுத்து தன் மகளை வீட்டில் சேர்க்காமலும், பேசாமலும் இருந்து வந்தார்.

ஆனால், பாக்கியலக்ஷ்மி தன் மகளிடம் பேச்சை தொடர்ந்து வந்தார். தற்போது ஊரில், அம்மன் கோவில் திருவிழா வந்ததன் காரணமாக, முத்துராஜ் மற்றும் ஷீபா அந்த விழாவில் பங்கேற்க வந்தனர். மீண்டும் திரும்பி அவர்கள் வீட்டிற்கு செல்லும் போது ஷீபாவிற்க்கும், முத்துராஜ்க்கும் இடையில், திடீரென ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டது.

அதன் காரணமாக மகள் தன் தாயிடம் நடந்ததை தெரிவிப்பதற்காக மீண்டும் தன் தாய் வீட்டிற்கு சென்று கதவை தட்டி உள்ளார். அந்த நேரம் மாரிமுத்து, கதவை திறந்து உனக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. எதற்காக இங்கே வந்தாய் என்று சத்தம் போட்டதன் காரணமாக தந்தைக்கும், மகளுக்கும் இடையே மீண்டும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த மாரிமுத்து, வீட்டில் இருந்த அரிவாளால் ஷீபாவை சரமாரியாக வெட்டியதாக கூறுகின்றனர். மகளுக்கு தலை மற்றும் கைகளில் பலமான வெட்டு விழுந்ததை அடுத்து, மாரிமுத்து அங்கிருந்து தப்பி தலைமறைவாகி விட்டார். இந்த வெறி செயலை கண்ட அருகில் இருந்தோர் ஷீபாவை மீட்டு பாளையங்கோட்டை, ஐகிரவுண்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி ஷீபா உயிரிழந்தார். இந்த தகவல் உடனடியாக ஊத்துமலை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து வந்து கொலைக்காக வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய மாரிமுத்துவை கைது செய்தனர்.

ஆலங்குளம் அருகே காதல் திமணம் செய்த பெண்ணை கொலை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.