மூன்றாவது அலையின் பாதிப்பு இந்த மாதத்தில் அதிகரிக்கும்! மருத்துவ வல்லுநர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
கொரோனா தொற்றானது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.முதல் அலையின் போது அண்டை நாடுகளே அதிகளவு பாதிப்புக்களை சந்தித்தது.தொற்றின் பிறப்பிடம் சீனா நாடக இருந்தாலும் அனைத்து நாட்டு மக்களின் உயிர்களையும் அதிகளவு பறித்துவிட்டது.முதல் அலையிலிருந்து இரண்டாம் அலை தீவீரமடையும் வரை எந்தவித முன்னேற்பாடுகளையும் அரசாங்கம் செய்யவில்லை.ஏன் அப்பொழுது வரை எந்த வித தடுப்பு மருந்தும் நடைமுறைக்கு கொண்டுவரவில்லை.
அதனால் டெல்லி உள்ளிட்ட பெரு மாநிலங்களில் மக்கள் கொத்து கொத்தாக உயிரை இழக்க நேரிட்டது.அதனையடுத்து மக்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள் மற்றும் தடுப்பூசி நடைமுறைக்கு வந்தது.மக்கள் ஆரம்ப கட்டக்காலத்தில் செலுத்துவதற்கு தயக்கமடைந்தனர்.இருப்பினும் நாளடைவில் அரசாங்கத்தின் விழிப்புணர்வாலும் மற்றும் தொடர்ந்து ஏற்பட்ட உயிர்சேத அட்சத்தினாலும் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.அதுமட்டுமின்றி நாடு முழுவதும் தற்போது ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் திறக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் மக்கள் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.அரசாங்கம் கூறிய நடைமுறைகளை பின்பற்றியதால் தற்பொழுது தான் இரண்டாம் அலையின் பாதிப்பு குறைந்து அதிலிருந்து மீண்டு வந்துள்ளோம்.அதேபோல வழக்கம்போல அனைத்து துறைகளும் தற்பொழுது தான் இயங்க ஆரம்பித்துள்ளது.இந்நிலையில் மருத்துவ வல்லுநர்கள் இந்த வருடம் இறுதியில் மூன்றாவது அலையின் தாக்கம் அதிகரிக்க கூடும் என கூறியிருந்தனர்.அதிலிருந்து தங்களை காப்பற்றிக்கொள்ள கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
அந்தவகையில் தினந்தோறும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை மற்றும் அதன் தீவிரத்தை மருத்துவ வல்லுநர்கள் கூறி வருவர்.அவ்வாறு கூறுகையில் இம்முறை ,மூன்றாவது அலையின் தாக்கம் தற்பொழுது காணப்படாது என்று தெரிவித்துள்ளனர்.அதனால் மூன்றாவது அலையின் தாக்கம் அடுத்த ஆண்டு இறுதியில் தீவீரமடைய வாய்ப்புகள் உள்ளதாக கூறியுள்ளனர்.மேலும் தற்பொழுது டெல்டா வகை வைரஸ் அதிகளவு பரவுவதாக தெரிவித்துள்ளனர்.