சொல்வதை செய்பவர் ரஜினி! முத்து படத்தில் நடந்த சுவாரசிய சம்பவம்!

0
306
#image_title

சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால் உலகமே ரஜினிகாந்தின் பெயர் தான் சொல்லும். அந்த அளவுக்கு அவர் ஒரு சிறந்த நடிகர் பெருமைக்குரியவர். அவரது நடிக்கும் ஸ்டைலும் இன்றைக்கு இருக்கும் 2k கிட்ஸ்க்கு கூட தெரியும்.

 

ஆரம்பத்தில் வில்லனாக நடித்து பின் அவர் ரஜினி அற்புதமான நடிப்பாகலும் ஸ்டைலாலும் ஹீரோவாக வலம் வந்து இந்த வயதிலும் ஹீரோவாகவே நடித்துக் கொண்டிருக்கிறார். சமூகத்தில் அவர் நடித்த ஜெயிலர் என்ற படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

 

முத்து படத்தை பற்றி நமக்கு நன்றாகவே தெரியும் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, மீனா, சந்திரபாபு நடித்த மாபெரும் வெற்றி பெற்ற குடும்பத் திரைப்படம். ரஜினி இரு வேடத்தில் நடித்திருந்தார்.

 

அப்பொழுது ரமேஷ் கண்ணா தான் ப்ரேக் டவுன் போடுவாராம். யாருக்கு எந்த ஷார்ட் எந்த நேரத்தில் என்ற பிரேக் டவுன் காட்சிகளை இயக்குனருக்கு கொடுப்பாராம். அப்படி பிரேக்டவுன் போட்ட விட்டு கேஸ் ரவிக்குமாரிடம் ரஜினி சார் நாளைக்கு 7 மணிக்கு வந்துவிட்டால் முடிந்து விடும் என்று சொல்கிறாராம்.

 

உடனே ரவிகுமார் இல்லை இல்லை அவர் எப்படி அவ்வளவு தொலைவில் இருந்து வருவார். அவரால் வர முடியாது என்று சொல்கிறாராம். அதைக் கேட்ட ரஜினி யேன் நான் வரமாட்டேனா? இல்லை இல்லை நான் வருவேன் என்று அவர் சொல்கிறார். உடனே ரவிகுமார் அதை எப்படி சார் வர முடியும்? மைசூர் 40km தொலைவு இருக்கிறது. உங்களால் காலை 7 மணிக்கு வர முடியாது என்று சொல்கிறாராம் ரஜினிகாந்த். இல்லை நான் வருவேன் பாருங்கள் என்று சொல்லிக் கிளம்பி விட்டாராம்.

 

அடுத்த நாள் காலையில் ரமேஷ் கண்ணா மற்றும் கேமரா மேன் ஆகியோர் அந்த மரத்திற்கு அடியில் எடுக்கப் போகும் சீனுக்காக அங்கு ஆறரை மணிக்கு சென்று விட்டார்களாம். அங்கு யாருமே காணோம் ஒருவன் மட்டும் தரையில் படுத்து இருக்கிறாராம் மேலே துண்டை போட்டுக் கொண்ட படுத்திருக்கிறார்.

 

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்களாம் . ஏழு மணிக்கு வந்து விடுவேன் என்று சொன்னவரை இன்னும் வரவில்லை. ஆறரை மணி ஆகிவிட்டது ஏழு மணிக்கு ஷாட் எப்படி வருவார் 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இன்னும் டைரக்டரே வரவில்லை. எப்படி அவர் வருவார்? என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

 

உடனே நான் வந்து விட்டேன் என்று பின்னொரு குரல் வருகிறதாம் அந்தப் படுத்துக் கொண்டிருந்தவரை ரஜினி தான்.

 

அனைவரும் திகைத்துப் போய்விட , சார் ! எப்படி சார் இவ்வளவு சீக்கிரம் வந்தீங்க ?இன்னும் டைரக்டரே வரவில்லை, என்று சொல்லி முடிக்கும் முன்பே கேஸ் ரவிக்குமார் வந்து விட்டாராம். உடனே ரமேஷ் கண்ணா போய் கேஸ் ரவிக்குமாரிடம் ரஜினி வந்துவிட்டார் என்று சொல்ல உடனடியாக சாட் ரெடி ஆனதாம்.

 

அப்படி சொல்வதை செய்பவர் ரஜினிகாந்த் என்று ரமேஷ் கண்ணா ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

Previous articleமீண்டும் மீண்டுமா! இந்த இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!
Next articleரஜினி கமலுக்கு கூட 100வது படம் ஓடவில்லை! இந்த 2 நடிகருக்கு மட்டும் மாபெரும் வெற்றி!