ரஜினி கமலுக்கு கூட 100வது படம் ஓடவில்லை! இந்த 2 நடிகருக்கு மட்டும் மாபெரும் வெற்றி!

0
221
#image_title

ரஜினி கமலுக்கு கூட அவர்களது நூறாவது படம் சரியாக ஓடவில்லை இந்த இரண்டு நடிகர்களுக்கு மாபெரும் வெற்றி தந்தது இந்த நூறாவது படம் மற்றும் இயக்குனர்.

 

நூறாவது படம் ராகவேந்திரா இந்த படம் அவ்வளவு சரியாக ஓடவில்லை. கமலின் நூறாவது படம் ராஜபார்வை இந்த படமும் அந்த காலத்தில் சரியாக ஓடவில்லை.

 

விஜயகாந்த் அவர்களின் நடிப்பில் ராவுத்தர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்தது தான் புலன்விசாரணை இதை செல்வமணி இயக்கினார். இது முற்றிலும் மாறுபட்ட படம். இந்த படத்தை மிகவும் கஷ்டப்பட்டு எடுத்தாராம் செல்வமணி.

 

இந்தப் படத்தில் குடும்பக் காட்சிகள் அவ்வளவாக இல்லை. பாடல்களும் அவ்வளவாக இல்லை. ஆனாலும் இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.

 

விஜயகாந்தின் ஆருயிர் நண்பன் ராவுத்தர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர்தான் இந்த படத்தின் தயாரிப்பாளர். செல்வமணிக்கு டேட் கொடுத்துவிட்டு மற்றும் மற்ற படம் எல்லாம் 40 நாட்களில் முடிந்து வருகிறது ஆனால் இந்த படம் அதிகமாக போய்க்கொண்டிருக்கிறது என்று ஒரு நாள் எதெட்சையாக ராவுத்தரிடம் சொல்லி இருக்கிறார் விஜயகாந்த்.

 

தனது நண்பன் அதிருப்தியை தெரிவிக்கிறான் என்று நினைத்த ராவுத்தர் செல்வமணியின் கழுத்தை மிகவும் இறுக்கமாக பிடிப்பது போல், படம் கிட்டத்தட்ட 75 சதவீதம் முடிந்த நிலையில் ஒரு சில காட்சிகள் மட்டுமே மீதம் இருக்கிறது. அவருக்கு இன்னும் இத்தனை நாட்களுக்குள் நீங்கள் படத்தை எடுத்து விட வேண்டும் என்று ராவுத்தர் அவர்களின் தரப்பில் இருந்து மிகவும் பிரஷர் இருந்திருக்கிறது. அதேபோல் அவருக்கு ஆயிரம் ஃபிலிம் ஐ மட்டும் கொடுத்து இதில் அனைத்து காட்சிகளையும் கொடுத்து விட வேண்டும் இதற்கு பின் இல்லை என்று சொல்லிவிட்டார்களாம்.

 

படம் நன்றாக வராது என்று இவர்களே முடிவு செய்துவிட்டு புரொடக்ஷனில் டீ காபி கேட்டால் கூட அவ்வளவு எளிதாக செல்வமணிக்கு கொடுக்க மாட்டார்களாம். செல்வமணியை உதாசீனப்படுத்தினார்கள் என்று சொல்லப்படுகிறது.

 

படம் வெள்ளிக்கிழமை அன்று ரிலீஸ் ஆகிறதாம். ராவுத்தர் சொல்கிறாராம் செல்வமணி இந்தப் பக்கம் வரவிடாமல் பார்த்துக் கொள் என்று சொல்கிறாராம். ஒரு சாதாரண மனிதனாக போய் அந்த படத்தை பார்க்கிறாராம் செல்வமணி.

 

சென்னை முதல் கன்னியாகுமாரி வரை அந்த படம் அவ்வளவு பெரிய மாபெரும் வெற்றி படமாக புலன் விசாரணை இருந்திருக்கிறது . அதன் பின் தனது ரூமில் இருந்து செல்வமணியிடம் நேரடியாக சென்று ஒரு ஆள் அளவிற்கு மாலை வாங்கி அணிவித்து பெருமைப்படுத்தினாராம் ராவுத்தர்.

 

” என்ன மாதிரியான மாதிரியான படம் எடுத்து இருக்கிறாய் ” . இவ்வளவு நல்ல படம் எடுத்திருக்கிறார், என்று சொல்லி புரட்சி கலைஞர் விஜயகாந்த் நூறாவது படத்தை நீதான் இயக்க வேண்டும். அதற்கு கேப்டன் பிரபாகரன் என்று பேரும் வைக்கப்பட்டதாம். அன்றையிலிருந்து தான் இன்று வரை நாம் விஜயகாந்த் அவர்களை கேப்டன் என்று தான் அழைக்கிறோம்.

 

விஜயகாந்த்திற்கு பிறகு சிவக்குமாரின் நடிப்பில் வெளிவந்த “ரோசாப் பூ ரவிக்கைக்காரி” என்ற சிவக்குமாரின் நூறாவது படம் மாபெரும் வெற்றி படமாக மாறியது. இயற்றியவர் தேவர் மோகன் இன்றளவும் சிவக்குமார் அவர்கள் அவரது இயக்குனர் நூறாவது படத்தை வெற்றி படமாக மாற்றி கொடுத்த இயக்குனரை இன்றளவும் போற்றுகிறார்.

author avatar
Kowsalya