“அவனுக்கு பேய் பிடித்து இருக்கு” 7 வயது சிறுவன் பரிதாபம்!

Photo of author

By Kowsalya

7 வயது சிறுவனுக்கு பேய் பிடித்துள்ளதாக சொல்லி தாய் உள்ளிட்ட மூன்று பெண்கள் அந்த சிறுவனை அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் கீழ் வைத்தியநான்குப்பம் குப்பத்தை சேர்ந்தவர் திலகவதி. இவருக்கு 7 வயது மகன் உள்ளார். இவன் பெயர் சபரி. இவர் அடிக்கடி திடீரென கத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுவனை அவரது தாயும் மற்ற மூன்று பெண்களும் வந்தவாசிப் பகுதியிலுள்ள ஒரு இஸ்லாமியர் ஒருவரிடம் பேய் ஓட்ட கூட்டிப் போகலாம் என்று முடிவு செய்துள்ளனர்.

அந்த 7 வயது சிறுவனை கூட்டிக்கொண்டு திலகவதி பாக்கியலட்சுமி கவிதா என்ற மூன்று பெண்களும் சென்றுள்ளனர். வந்தவாசிக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு கண்ணமங்கலம் என்ற பேரூராட்சியின் மண்டபத்தில் சிறுவனுடன் அந்த பெண்கள் மூன்று பேரும் தங்கியுள்ளனர்.

இரவு நேரத்தில் சிறுவன் கூச்சலிட்ட தாக கூறப்படுகிறது. உடனே அந்தப் பெண்கள் மூவரும் சிறுவனை தாக்கியதோடு மட்டுமல்லாமல் கழுத்துப் பகுதியில் கை வைத்து அழுத்திய தாக கூறப்படுகிறது.

இதனை பார்த்த அந்த மண்டபத்தில் தங்கி இருக்கும் ஆதரவற்ற மக்கள் தட்டி கேட்ட நிலையில் பெண்கள் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிறிது நேரத்தில் சிறுவன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கண்ணமங்கலம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்களை விசாரிக்கவும், போலீசார் உடனே அந்தப் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறுவன் உயிரோடுதான் இருக்கிறான் என்று கூறி பொய் நாடகம் செய்துள்ளனர். பின் சிறுவனின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பின்பு மூன்று பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்த பொழுது மூவரும் குடியாத்தம் அருகில் உள்ள கே. வி குப்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இருந்த குழந்தை இவர்களது தானா இல்லை கடத்தி வரப்பட்டதாக என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.