CRIME:தஞ்சை மாவட்டத்தில் அரசு பள்ளியில் ஆசிரியை ரமணி கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம், சின்னமனை கிராமத்தை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி. இவர் மல்லிப்பட்டினம் அரசு பள்ளியில் ஆசிரியராக கடந்த நான்கு மாதங்களுக்கு முன் சேர்ந்து இருக்கிறார். இவரை அதே பகுதியை சேர்ந்த மதன்குமார் என்ற இளைஞர் சில தினங்களுக்கு முன் திருமணத்திற்கு பெண் கேட்டு ரமணியின் வீட்டுக்கு வந்து இருக்கிறார். மேலும் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார் ஆசிரியை ரமணி.
இந்த நிலையில் தான் இன்று ரமணி வழக்கம் போல் மல்லிப்பட்டினம் அரசு பள்ளிக்கு வேலைக்கு சென்று இருக்கிறார். இந்த நிலையில் வகுப்பறையில் இருந்த ரமணியை பின் தொடர்ந்து வந்த மதன்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியை ரமணியின் கழுத்து பகுதியில் சரமாரியாக குத்தி இருக்கிறான். இதனால் ஆசிரியை ரமணி வகுப்பறையில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து விட்டார்.
ஆசிரியர் ரமணி பள்ளிக்கு நேரமாக சென்றால் இந்த சம்பவம் நடக்கும் போது அருகில் யாரும் இல்லை. பிறகு வந்த ஆசிரியர்கள் ரமணி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள்.இது குறித்து தஞ்சை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு மதன் குமாரை போலீசார் கைது செய்தனர்.
பின் போலீசார் விசாரணையில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காததால் ஆசிரியை ரமணியை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார் மதன் குமார்.