அண்ணனால் தங்கைக்கு உண்டான குழந்தை!! பள்ளி மாணவிக்கு நடந்த விபரீதம்!!

Photo of author

By Sakthi

Sexual Offens:11- வகுப்பு படிக்கும் மாணவிக்கு  பெண் குழந்தை பிறந்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில்  பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவ,மாணவிகள் பாலியல் ரீதியான குற்றங்களுக்கு இரையாகி வருகின்றனர் என்பது அதிர்ச்சி அளிக்க கூடிய விஷயமாக இருக்கிறது. இது போன்ற ஒரு குற்றச் சம்பவம் தான்   தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

நாமக்கல்    பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி, தனது வீட்டின் அருகில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி வகுப்பில் இருந்தபோது மாணவிக்கு, திடீரென வயிற்று வலி ஏற்பட்டு வலியால் துடிதுடித்து இருக்கிறார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள்  மாணவியை  அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு பிற ஆசிரியர்கள் உதவியுடன் அந்த மாணவியை தூக்கி கொண்டு சென்று இருக்கிறார்கள். மேலும் அந்த மாணவியை மருத்துவர்கள்  சிகிச்சைக்கா பரிசோதனை செய்து இருக்கிறார்கள், பரிசோதனையில் ஒரு அதிர்ச்சிகரமான உண்மை வெளியானது.

அந்த மாணவி  நிறை மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், தற்போது மாணவிக்கு பிரசவ வலி வந்துள்ளதை கண்டு மருத்துவர்கள் அதிர்ந்து போய் உள்ளனர். மேலும் சில நிமிடங்களில் அந்த மாணவிக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது. இத் தகவல் அறிந்த  குழந்தை நல மருத்துவ அதிகாரிகள், மாணவியிடம் விசாரணையில் ஈடுபட்டனர். அதில் அந்த மாணவி குடும்பம் ராசிபுத்தில் வசிக்கும் போது , அவரின் சித்தி மகன் ரங்கராஜ் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியது, இதை பற்றி வெளியே யாருக்கும் சொல்லக்கூடாது என எச்சரித்ததாக மாணவி தெரிவித்து இருக்கிறார்.

இதனால் அந்த நபரை கைது செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.11- வகுப்பு  படிக்கும் மாணவி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு பள்ளி மாணவ மாணவியர்களிடமும், பெற்றோர்களிடமும்  போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம் ஆகும்.