பலாப்பழத்தினால் தாய் மகன் என அடுத்தடுத்த உயிரிழப்பு! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!
தமிழகத்தில் கடலூரில் புவனகிரி அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் குடும்பத்தில் மனைவி தனது பிள்ளைகளான பரணிதரன் மற்றும் இனியா என்ற இரு குழந்தைகள் உள்ளன. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தாய் தனது பிள்ளைகளான பரணிதரன் மற்றும் இனியா ஆகியோர் ஒன்றாக வீட்டில் உணவு சாப்பிட்டுவிட்டு பலாப்பழம் சாப்பிட்டனர். தாகம் எடுத்து உள்ளதால் குளிர்பானமும் குடித்ததாக சொல்லப்படுகிறது.
திடீரென்று வீட்டில் மூவருக்கும் வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது. அதைக் கண்ட வேல்முருகன் அவசர அவசரமாக அவர்களை மூவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அனுமதிக்கப்பட்ட மூவரில் பரணிதரன் என்ற சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.
அச்சிறுவனின் உடல் அடக்கம் செய்வதற்காக மருத்துவமனையிலிருந்து தாய் பரணியை அவர் உறவினர்கள் அழைத்துச் சென்றார்கள். அதனையடுத்து பரணியின் தாய்க்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் பரணி மற்றும் அவரது மகள் இனியா ஆகிய இருவரையும் அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பரணிதரணின் தாயாரும் நேற்று உயிரிழந்தார்.
பரணியின் மகளான இனியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சிதம்பரம் முத்தையா மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கூறுகையில் பலா பழம் சாப்பிட்டுவிட்டு தொடர்ந்து குளிர்பானம் குடித்ததால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பில்லை. அச்சிறுவனை பிரேத பரிசோதனை செய்த பின்னரே அதில் வெளியான உண்மை தெரியவரும் என்று தெரிவித்துள்ளார்.போலீசார் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மகன் மற்றும் அவரது தாய் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.