தேவைக்கு வாங்கிய செல்போனே உயிரை பறித்த சம்பவம்! பெற்றோர் பரிதவிப்பு!

Photo of author

By Hasini

தேவைக்கு வாங்கிய செல்போனே உயிரை பறித்த சம்பவம்! பெற்றோர் பரிதவிப்பு!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஊனை பள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவரது மகன்கள் ஹேமச்சந்திரன் (வயது 13). லோகேஷ் (15). அங்கு உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஹேமச்சந்திரன் 8-ம்வகுப்பும், லோகேஷ் 10-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்த நிலையில் கொரோனா காரணமாக ஆன்லைன் வகுப்பு நடந்து கொண்டு உள்ளதால் ஹேமச்சந்திரன் மற்றும் இவரது அண்ணன் லோகேஷ் இருவரும் செல்போனில் பாடம் படித்து வந்துள்ளனர்.

சிவக்குமாருக்கு ஊரில் ஒரு வீடும், நிலத்தில் ஒரு வீடும் உள்ளது என்றும்,  மகன்கள் இருவரும் நிலத்தில் உள்ள வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் வகுப்புகளை பார்த்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்பு போக மீதி நேரம் செல்போனில் கேம் விளையாடுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.இருவரும் ஒரே போனில் பிரீபையர் விளையாடுவது வழக்கம் ஆகுமாம்.

நேற்று மாலை 4 மணிக்கு இருவரும் போனில் விளையாடி இருந்துள்ளனர்.அப்போது விளையாட்டில் இருவரும் தற்கொலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து இருவரும் இரு வேறு அறைகளில் தூக்கில் தொங்க ஆயத்தமாகியுள்ளனர்.சின்ன பையன் வெளி அறையிலும், பெரிய பையன் உள் அறையிலும் தூக்கில் தொங்க கயிறுகளை எடுத்து சென்றனர்.

சின்னவன் உடனே தூக்கில் தொங்கிஉள்ளான், உடனே வழி தாங்க முடியாமல் அலறி துடித்து அண்ணனை அழைத்து உள்ளான்.அதனால் லோகேஷ் பெரிய பையன் உயிர் தப்பி உள்ளான்.

இந்த விஷயத்தை தன் அம்மா ஜமுனாவிற்கு செல்போன் மூலம் தெரிவித்து உள்ளான்.அதை கேள்விப்பட்டு அக்கம்பக்கத்தினர் சேர்ந்து அந்த சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஹேமசந்திரனை சோதித்து பார்த்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிர் இழந்ததாக தெரிவித்தனர்.இவன் கத்தி கூச்சலிட்டதால் மட்டுமே பெரிய பையன் உயிர் தப்பி உள்ளான்.

இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்ததும் அணைக்கட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தந்தை சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.