பூர்விகா மொபைல்ஸ் உரிமையாளரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை!

Photo of author

By Rupa

பூர்விகா மொபைல்’ஸ் தமிழ்நாடு , கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் தனது பல கிளைகளைத் திறந்துள்ளது.
இந்நிலையில் , பூர்விகா மொபைல்ஸ் உரிமையாளரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இன்று ( 17.10.2024 ) காலை 7 மணி முதல் மொத்தம் மூன்று இடங்களில் 15 வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டக் கொண்டிருக்கின்றனர்.
வீட்டில் கிடைக்கும் தகவல்களை பொறுத்து பூர்விகா மொபைல்ஸ் கிளைகளிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தும் என  அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பூர்விகா நிறுவனத்தின் உரிமையாளர் மீது வரி ஏய்ப்புப் புகார் வந்ததன் அடிப்படையில் இச்சோதனை நடந்து கொண்டிருக்கிறது.
பூர்விகா நிறுவனத்தின் உரிமையாளர் மீது வரி  ஏய்ப்புப் புகார் வந்ததன் அடிப்படையில் இச்சோதனை கோடம்பாக்கம், பள்ளிக்கரணை மற்றும் பல்லாவரம் ஆகிய மூன்று இடங்களில் நடந்து கொண்டிருக்கிறது.
தீபாவளியை முன்னிட்டு பூர்விகாவின் அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பூர்வீகா நிறுவனத்தின் உரிமையாளர் மீது வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொள்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.