2018-19 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் காலக்கெடுவை வருகிற ஜூலை 30 ஆம் தேதி வரை ஒரு மாதமாக நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தையும் அடுத்த ஆண்டு 2021 மார்ச் மாத இறுதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தற்போதுள்ள ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த 2019-2020 நிதியாண்டிற்கான வரி தாக்கல் காலக்கெடுவை நவம்பர் மாதம் 30 தேதி நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து மத்திய நேரடி வரி வாரியம் வெளியிட்ட அறிவிப்பின்படி, 2018-19 நிதியாண்டிற்கான (AY 2019-20) அசல் மற்றும் திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, 2020 ஆம் ஆண்டு ஜூலை 31 வரை நீட்டிதுள்ளது.
மேலும் 2019-2020 நிதியாண்டிற்கான அசல் மற்றும் திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவையும் வரும் நவம்பர் மாதம் 30 வரை மத்திய அரசு நீட்டித்து அறிவித்துள்ளது.
மேலும் சிறு.குறு மற்றும் நடுத்தர வர்க்க வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்குவதற்காக, வரி செலுத்துவோரின் 1 லட்சம் வரையிலான சுய மதிப்பீட்டு வரி செலுத்தும் தேதியை 2020 ஆம் ஆண்டு நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வருமான வரிச்சட்டம், 1961 இல் குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்குள் சுய மதிப்பீட்டு வரி முழுவதுமாக செலுத்தப்படலாம். தாமதமாக பணம் செலுத்தினால் ஐடி சட்டத்தின் பிரிவு 234 ஏ இன் கீழ் வட்டி கட்ட வேண்டிய நிலை உருவாகும் என்றும் இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.