மீண்டும் உயர்த்தப்பட்ட பால் விலை இன்று முதல் அமல்! அரசு வெளியிட்ட அதிரடி முடிவு!
திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு எண்ணற்ற நன்மைகள் உண்டாகும் என தேர்தல் வாக்குறுதியாக கூறி வந்தது.அதனை தொடர்ந்து எதிர்பார்த்ததை போலவே திமுக ஆட்சிக்கு வந்தது.ஆனால் உடனே பல பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது.ஆனால் ஆட்சிக்கு வந்தவுடனே பால் விலை மூன்று ரூபாயாக குறைத்து ஆணை பிறப்பித்தது.அதனை தொடர்ந்து பால் சம்பந்தப்பட்ட அனைத்து பொருட்களின் விலையையும் உயர்த்தப்பட்டது.
அதனை தொடர்ந்து பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரவேண்டும் என கடந்த 2022 ஆம் ஆண்டு போராட்டம் நடைபெற்றது.அவர்களுடையே போராட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி உத்தரவிட்டது.அதன் அடிப்படையில் பால் கொள்முதல் விலை ரூ 32 ல் இருந்து 35 ஆக உயர்த்தப்பட்டது.மேலும் எருமைப்பால் விலையை 41 ல்லிருந்து 45 ஆக உயர்த்தப்பட்டது.
ஆவின் பாலகம் விநியோகிக்கும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை 52 ல் இருந்து 62 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.இந்நிலையில் புதுச்சேரியில் அண்மையில் தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.அதனை தொடர்ந்து தற்போது பால் விலையில் லிட்டருக்கு ரூ 4 உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு நிறுவனமான பாண்லே மூலம் பால் விற்பனை நடைபெறுகின்றது.கடந்த சில தினங்களுக்கு முன் பால் கொள்முதல் விலையை மூன்று ரூபாய்க்கு உயர்த்தி அரசு அறிவிப்பை வெளியிட்டது.
இந்நிலையில் விற்பனை விலையில் லிட்டருக்கு நான்கு ரூபாய் உயர்த்தி உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.அந்தவகையில் 42 ரூபாயிலிருந்து தற்போது 46 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய விலை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.