தவறாக கணித்து தடுமாறும் இந்திய அணி !! தட்டி தூக்கிய நியூசிலாந்து !

0
113
The Indian team is miscalculating and stumbling!! Knocked off New Zealand!
The Indian team is miscalculating and stumbling!! Knocked off New Zealand!

 

நியூசிலாந்து அணி இந்தியாவில் பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த போட்டியானது பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் 16ம் தேதி நடைபெற இருந்த  நிலையில் பரவலாக மழை பெய்த காரணத்தால் அன்று டாஸ் போடாமல் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது.

நேற்று மழை இல்லாத காரணத்தால் நேற்று முதல் போட்டியானது தொடங்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. இந்திய அணி வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.இதில் 5 வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.  இவ்வாறு ரன் அடிக்க முடியாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்ற தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

 பொதுவாக  இந்திய மண்ணில் பிட்ச் ஆனது வேக பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்ததில்லை. சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். ஆனால் இந்த போட்டி நடைபெறுவதற்கு முன்பு மழை பொழிந்த காரணத்தால் பிட்ச் ஆனது வேக பந்து வீச்சாளர்களுக்கு  சாதகமாக மாறியது.  நேற்று நடந்த போட்டியில் “சீம் மொமன்ட்” அதிகமாக இருந்தது.

 சீம் மொமன்ட் என்பது  இந்திய மண்ணில் கடந்த 3 ஆண்டுகளில் பிட்ச் டிகிரி 0.5அளவுக்கு இருந்துள்ளது. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் மேட் ஹென்றி வீசிய போது 1.3 டிகிரி நகர்ந்துள்ளது. இதனால் பேட்ஸ்மேன்கள் பந்து வீசுவதை கணிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் வேக பந்து வீச்சாளர்களான மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளும், வில் ஒ ரூர்க் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

Previous article6 முறை சாம்பியன் ! இந்த முறை முதலாவதாக வீடு திரும்பிய ஆஸ்திரேலியா !!
Next articleஎம்ஜிஆர் போல தனது அரசியல் வியூகத்தை வகுக்கும் விஜய்!! 2026 சட்டமன்ற தேர்தலுக்கான புதிய ஸ்கெட்ச்!!