சிலியை வென்று வெற்றியுடன் தொடங்கிய இந்திய மகளிர் அணி! நேசன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி!!

Photo of author

By Vijay

சிலியை வென்று வெற்றியுடன் தொடங்கிய இந்திய மகளிர் அணி! நேசன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி!!

Vijay

The Indian women's team started with a win over Chile! Nations Cup Hockey Tournament!!

சிலியை வென்று வெற்றியுடன் தொடங்கிய இந்திய மகளிர் அணி!

நேசன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி!!

நேசன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி சிலியை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது. 2022- ஆம் ஆண்டுக்கானஇன் மகளிர்  நேசன்ஸ் கோப்பைக்கான ஹாக்கி போட்டிகள் ஸ்பெயினின் வாலன்சியா நகரில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.இதில் ஒரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 8- வது இடத்தில் இருக்கும் இந்திய அணி  14-வது இடத்தில் இருக்கும் சிலி அணியுடன் விளையாடின.

தொடக்கம் முதலே இந்திய மகளிர் அணி சிறப்பான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய அணியின் சங்கீதா குமாரி 2-வது நிமிடத்திலும் சோனிகா 10-வது நிமிடத்திலும் கோல் அடித்து சிறப்பான தொடக்கம் ஏற்படுத்தி இந்திய அணி முன்னிலை பெற வழி வகுத்தனர்.இதனால் கோல் அடிக்க சிலி அணி போராட வேண்டிய சூழ்நிலை உருவானது. கோல் அடிப்பதர்க்கான வாய்ப்புகளை அந்த அணி தவற விட்டு விட்டது.மேலும் பெனால்டி கார்னர் வாய்ப்புகளை இரண்டு அணிகளும் பயன்படுத்தாமல் வீணடித்தன.

இந்நிலையில் 2-0 என்ற புள்ளிகள் பெற்று இந்திய அணி முன்னிலையில் இருந்தது. அடுத்து வந்த 31-வது நிமிடத்தில் இந்திய அணியின் நவ்னித் கவுர் ஒரு கோல் அடித்தார்.இதனால் இந்திய அணி 3-0 என்ற புள்ளி கணக்கில் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தது.பின்னர் சிலி அணியின் வில்லாகிரான் ஒரு கோல் அடித்த நிலையில் 3-1 என்ற புள்ளிக் கணக்கில் நிலைமை இருந்தது. இறுதியில் போட்டி முடிவில் 3-1 புள்ளிக்கணக்கில் இந்திய அணி வெற்றிப்பெற்றது.