இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்! திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்யும் முறையில் மாற்றம்!
தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோவில்களிலும் சிறப்பு கட்டண முறையில் சாமி தரிசனம் செய்யும் வசதி உள்ளது.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோவிலில் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய நடவடிக்கைகளை நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில். பார்த்தசாரதி கோவிலில் அடுத்தாண்டு ஜனவரி 2 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் போன்றவைகளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருக்கோவிலின் மாடவீதியை சுற்றிலும் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.மேலும் முக்கிய பிரமுகர்கள் மாட வீதியில் இருந்து 50 மீட்டர் தொலைவு நடந்து சென்று சாமி தரிசனம் செய்யலாம்.முதியோர் மற்றும் ஊனமுற்றோர் சாமி தரிசனம் செய்வதற்கு பேட்டரி கார் மற்றும் வீல் சேர்கள் திருக்கோயில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வாகனத்தில் வரும் பக்தர்கள் வாகனங்களை பி.வி.நாயக்கன் தெரு, எம்.கே.டி மேல்நிலைப்பள்ளி சாலை, பெசன்ட் சாலை ஆகிய இடங்களில் நிறுத்தி கொள்ளலாம்.
திருக்கோவில்களில் நடைமுறையில் இருக்கும் சிறப்பு கட்டண தரிசன முறை முற்றிலும் ரத்து செய்ய பேச்சுவார்த்தை நடந்து வந்தது ஆனால் திருக்கோவிலின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு சிறப்பு கட்டணம் ரூ 200 ல் இருந்து ரூ 100ஆக குறைக்கப்பட்டுள்ளது.குறிப்பாக திருக்கோவிலில் முழுமையாக இந்த கட்டணம் ரத்து செய்ய பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் திருக்கோவிலில் முழுமையாக சிறப்பு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
துறை சார்ந்த அலுவலர்கள் கூட்டத்தில் எந்தெந்த திருக்கோவிலில் சிறப்பு தரிசன கட்டணத்தை ரத்து செய்ய கருத்து தெரிவிக்கப்படுகின்றதோ அந்த கோவிலின் சூழ்நிலை பொறுத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.வரும் வாரத்தில் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா முன்னேற்பாடு பணிகள் ஆய்வு செய்யப்படும் என தெரிவித்தார்.