என்னை நீ அந்த மாதிரி தான் கூப்பிடனும் என்று விஜய் சொன்னார்!! எனக்கு அது கூச்சமாக இருந்தது!! மனம் திறந்த 33 வயது நடிகை!

Photo of author

By Divya

என்னை நீ அந்த மாதிரி தான் கூப்பிடனும் என்று விஜய் சொன்னார்!! எனக்கு அது கூச்சமாக இருந்தது!! மனம் திறந்த 33 வயது நடிகை!

தளபதி விஜய் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார்.இதற்கிடையே விஜய்யின் கடைசி படமான விஜய் 69 குறித்த அறிவிப்பு அவ்வப்போது வெளியாகி வருகிறது.

இந்த இரண்டு படங்களுக்கு பின்னர் விஜய் தன்னை முழு நேர அரசியல்வாதியாக அர்ப்பணிக்க உள்ளார்.விஜய்யின் இந்த முடிவு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தாலும் அரசியலுக்கு வந்த பின்னர் தான் படங்களில் நடிக்க மாட்டேன் என்ற அவரின் அறிவிப்பு ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

விஜய்யை இனி திரையில் பார்த்து ரசிக்க முடியதா என்ற ஏக்கம் இப்பொழுதே ரசிகர்களிடம் தொற்றிவிட்டது.தற்பொழுது விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் வருகின்ற விநாயகர் சதுர்த்திக்கு வெளியாக உள்ள நிலையில் 2004 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற விஜய்யின் ‘கில்லி’ படம் 20 வருடங்களுக்கு பின்னர் ஏப்ரல் 20 அன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டு மவுசு குறையாமல் சொல்லி அடித்தபடி வசூலில் கலக்கி வருகிறது.

தற்பொழுது கில்லி படம் குறித்த தகவல்கள் தான் இணையத்தில் உலா வந்த வண்ணம் உள்ளது.கில்லி படத்தில் நடித்த நடிகர்,நடிகைகள் படப்பிடிப்பின் போது நடந்த நிகழ்வுகளை பகிர்ந்து வருகின்றனர்.

அந்தவகையில் இப்படத்தில் விஜய்க்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்த ஜெனிபர் தற்பொழுது கில்லி பட அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார்.இவரை ஜெனிபர் என்று சொல்வதை விட ‘புவனா’ என்று சொன்னால் தான் பலருக்கும் தெரியும்.அந்த அளவிற்கு கில்லி படத்தில் தனது நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருப்பார்.ரியல் லைஃபில் அண்ணன்,தங்கை எப்படி இருப்பார்களோ அதேபோல் தான் படம் முழுவதும் விஜய் மற்றும் ஜெனிபர் அண்ணன்,தங்கையாகவே வாழ்ந்து இருப்பார்கள்.

ஜெனிபர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்:

படத்தில் ஒரு சில காட்சிகளில் விஜய்யை வாடா,போடா என்று சொல்ல வேண்டி இருந்தது.ஆனால் அவரை அவ்வாறு கூப்பிட பயமாகவும்,கூச்சமாகவும் இருந்தது.பின்னர் விஜய் தன்னை அழைத்து படத்தில் அண்ணனை வாடா போடா என்று தான் சொல்ல வேண்டும் என தைரியப்படுத்தி அவர் தான் என்னை அப்படி நடிக்க வைத்தார்.இது தான் கில்லி படத்தில் தனக்கு பிடித்த மறக்க முடியாத விஷயம் என்று தற்பொழுது ஜெனிபர் தெரிவித்து இருக்கிறார்.