வேலூர் அரசினர் பாதுகாப்பு இடத்திலிருந்து 6 இளம் சிறார்கள் தப்பி ஓடிய விவகாரம்!

Photo of author

By Savitha

வேலூர் அரசினர் பாதுகாப்பு இடத்திலிருந்து 6 இளம் சிறார்கள் தப்பி ஓடிய விவகாரம்!

இதுவரை 4 பேர் போலீசில் சிக்கிய நிலையில் ஒருவர் சேலத்தில் சரண்டர்! தலைமறைவாக உள்ள ஒருவருக்கு போலீஸ் வலைவீச்சு.

வேலூர் அரசினர் பாதுகாப்பு இடத்திலிருந்து கடந்த மார்ச் 27ம் தேதி 6 இளம் சிறார்கள் தப்பி ஓடியவர்களை பிடிக்க வேலூர் எஸ்பி ராஜேஷ் கண்ணன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக கடந்த மார்ச் 31ஆம் தேதி ஒருவரும், ஏப்ரல் 1ம் தேதி இருவரும், ஏப்ரல் 2ம் தேதி ஒருவரும் என தப்பியோடிய 6 பேரில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் போலீசில் பிடிபடாமல் இருந்து வந்த இருவரை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், ஒரு இளம் சிறார் சேலம் இளம் சிறார் நீதிமன்ற குழுமத்தில் சரணடைந்துள்ளார்.

அவரை செங்கல்பட்டில் உள்ள சீர்திருத்த பள்ளியில் விடப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாக உள்ள ஒரு இளம் சிறாரை பிடிக்கும் பணி போலீசாரால் தீவிரபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.