உத்தரப்பிரதேச மாநிலத்தின் சோஹவ்ன் பகுதியில் இருக்கிற அரசு துவக்கப் பள்ளியில் மாணவர்களை கட்டாயப்படுத்தி கழிப்பறையை சுத்தம் செய்ய வைக்கப்பட்ட காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
அந்த காணொளியில் ஒரு நபர் கழிப்பறையை சுத்தம் செய்யும் மாணவர்களை விரட்டி வேலை வாங்குவதும், சொன்னபடி செய்யவில்லையென்றால் கழிப்பறைக்குள் வைத்து பூட்டி விடுவதாகவும், மிரட்டியதும், பதிவாகியிருந்தது
இது பற்றி தகவலறிந்தவுடன் மாவட்ட கல்வி அதிகாரி மணிராம் சிங் விசாரணை செய்து அறிக்கை வழங்குமாறு வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டார் என்றும், அதன் பிறகு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், கூறியிருந்தார். இந்த நிலையில், வட்டார கல்வி அலுவலரின் அறிக்கையை தொடர்ந்து பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.