சமூக ஆர்வலரை லாரி ஏற்றி கொலை செய்த விவகாரம்! இழப்பீடு தரக்கோரி பாமக தலைவர் தமிழக அரசிடம் கோரிக்கை!

Photo of author

By Rupa

சமூக ஆர்வலரை லாரி ஏற்றி கொலை செய்த விவகாரம்! இழப்பீடு தரக்கோரி பாமக தலைவர் தமிழக அரசிடம் கோரிக்கை!

கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரியை குறித்து சமூக ஆர்வலர் அதிகாரிகளிடம் புகார் அளித்ததால்,அவரை சரக்குந்து ஏற்றி கொலை செய்துள்ளனர்.இதனை பாமக தலைவர் வன்மையாக கண்டித்துள்ளார்.அதுமட்டுமின்றி அவரது குடும்பத்திற்கு ஒருவருக்கு அரசு வேலை தரக்கோரியும், ரூ.50 லட்சம் இழப்பீடாக தரக்கோரியும் தமிழக அரசை வலியுறுத்துயுள்ளார்.

கரூர் மாவட்டம் கரூர்குப்பம் கிராமத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரி குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்த ஜெகநாதன் என்ற சமூக ஆர்வலர் கொடூரமான முறையில் சரக்குந்து ஏற்றி படுகொலை செய்யப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இயற்கை வளத்தை பாதுகாப்பதற்காக போராடிய ஒருவரை கொல்லத் துணிகிறார்கள் என்றால், அவர்களுக்கு வலிமையான பின்னணி இருப்பதாகவே தோன்றுகிறது. அது குறித்து விசாரணை நடத்துவதுடன், ஜெகநாதனின் படுகொலைக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

கொல்லப்பட்ட சமூக ஆர்வலர் ஜெகநாதனின் குடும்பத்திற்கு பா.ம.க. சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்; அத்துடன் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.