தமிழக மக்களுக்கு அடித்த ஜாக்பாட்.. பொங்கல் தொகுப்பு குறித்து வெளியான மாஸ் அறிவிப்பு!!

Photo of author

By Rupa

Tamilnadu Gov : பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு கூட்டுறவு பொருட்கள் மூலம் சிறப்பு தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

தமிழக அரசானது நியாய விலைக் கடை மூலம் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மலிவு விலையில் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்குகிறது. இதனையடுத்து  குடும்ப அட்டை உள்ள பெண்மணிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.

இவ்வாறு இருக்கையில் பொங்கல் திருநாளில் வருடம் தோறும் இலவச வேஷ்டி சேலை மற்றும் பரிசு தொகையாக ஆயிரம் வழங்குவதுண்டு. இவ்வாறு இருக்கையில் கடந்த முறை கூட்டுறவு மூலம் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டது.அதாவது இதனை ரூ 199  ரூ 499  ரூ 999 என மூன்று வகைகளில் பிரித்தனர். இந்த தொகுப்பில் குறிப்பிட்ட சில மள்ளிகை பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

கடந்த முறை போல இம்முறையும் கூட்டுறவு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதேபோல கடந்த தீபாவளி பண்டிகை அன்றும்  செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த பொங்கல் பண்டிகையன்று இவ்வாறான சிறப்பு தொகுப்பானது மாவட்டந்தோறும் உள்ள அனைத்து கடைகளிலும் வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

மேற்கொண்டு ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் தமிழக அரசின் இலவச பொங்கல் தொகுப்பான கரும்பு பொங்கலுக்கு தேவையான அரிசி வெல்லம் நெய் உள்ளிட்ட பொருட்களையும் பெற்றுக்கொள்ளலாம்.