சுதந்திர போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது தியாகிகளுக்கு நீதிபதிகள் தான் தண்டனை வழங்கினர். ஆனால் இன்று நீதிபதிகள் தியாகிகளை போற்றி வணங்குவது அவர்களுடைய சிறப்பை காட்டும் விதமாக இருக்கிறது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் தெரிவித்துள்ளார். மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் 75வது சுதந்திர தின விழா தியாகிகள் தினத்தை முன்னிட்டு நம்ம தியாகிகள் என்ற ஆவணப்படம் ஒன்று வெளியிடப்பட்டது.
பொருளாளர் செந்தில்குமார் வரவேற்பு உரையாற்றினார், அதேபோல செயலாளர் நந்தாராவ் உரையாற்றினார். அதேபோல தலைவர் ஜவஹர் பாபு தலைமை தாங்கினார், தொல்லியல் துறை மண்டல இயக்குனர் அருண்ராஜ், தமிழ் ஆராய்ச்சி கட்டளை செயலாளர் வேலுச்சாமி வாழ்த்தி பேசினார், தியாகி லட்சுமி காந்தன், பாரதி, மதுரை காமராஜ் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் ,உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆவண படத்தை வெளியிட்டு பேசிய நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் தியாகிகளின் கஷ்டங்களை இளைய சமுதாயத்திடம் கொண்டு சேர்க்க வேண்டும் என தெரிவித்தார். சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பொது அறிவு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.