விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிப்பு

0
91

விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிப்பு

விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை இயக்குனர் அஜய் ஞானமுத்து அறிவித்துள்ளார்.

நடிகர் விக்ரம் நடிப்பில் மகான் திரைப்படத்துக்குப் பிறகு அடுத்த ரிலீஸாக வர உள்ளது கோப்ரா. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் தொடங்கி கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் படப்பிடிப்பு இழுத்துக்கொண்டே சென்றது. இந்த படத்தில் விக்ரம்  7 கெட்டப்புகளில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பாக வெளியிடுகிறார். சமீபத்தில் படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா நடந்தது. ஆனால் எதிர்பார்த்த நேரத்துக்குள் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளின் வேலை இன்னும் முடியாததால் அந்த தேதியில் ரிலீஸ் ஆகவில்லை.

இந்நிலையில் இப்போது படத்தின் புதிய ரிலீஸ் தேதியை இயக்குனர் அஜய் ஞானமுத்து அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 31 ஆம் தேதி கோப்ரா திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது விக்ரம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக ஹிட் படமே கொடுக்காமல் இருக்கும் விக்ரம் இந்த படத்தை மிகுந்த ஆவலோடு எதிர்நோக்கியுள்ளார். இதையடுத்து அவர் பா ரஞ்சித் இயக்கும் வரலாற்று படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.