எதிர்க்கட்சித் தலைவரை பார்த்து சிரித்ததால்! விமானத்தில் பரபரப்பு!

Photo of author

By Sakthi

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ள சென்னையிலிருந்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எதிர்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் ஆகிய இருவரும் மதுரைக்கு சென்று இருக்கிறார்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் இருக்கின்ற முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் நினைவிடத்தில், குருபூஜை விழா இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களும், ஒரே விமானத்தில் சென்று இருக்கிறார்கள்.

முதல் வரிசையில் வலதுபுற ஜன்னல் பக்கத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இடதுபுற ஜன்னல் அருகில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களும் அமர்ந்து பயணித்தார்கள்.

பயணத்தின் ஆரம்பத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஸ்டாலின் அவர்களை கண்டதும் வணக்கம் தெரிவித்து புன்னகைத்தார், பதிலுக்கு அவர்களும் வணக்கம் தெரிவித்திருக்கின்றார்.

விமானத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காமராஜ் ஆகியோரும் முதலமைச்சருடன் சென்று இருக்கிறார்கள் அதுமட்டுமல்லாமல், முதன்முதலாக முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இருவரும் ஒரே விமானத்தில் பயணம் செய்து இருக்கிறார்கள்.