தமிழகம் முழுவதும் இன்று வெளியானது தி கேரளா ஸ்டோரி!!

Photo of author

By Rupa

தமிழகம் முழுவதும் இன்று வெளியானது தி கேரளா ஸ்டோரி!!

Rupa

The Kerala Story was released across Tamil Nadu today!!

தமிழகம் முழுவதும் இன்று வெளியானது தி கேரளா ஸ்டோரி!!

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாக உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பி நிலையில் சென்னையில் தி கேராள ஸ்டோரி படம் ஒளிபரப்பப்படும் திரையங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியீடு காரணமாக கோவை புரூக் ஃபீல்ட்ஸ் உள்ளிட்ட இடங்களில் அதிக போலீஸ் பாதுகாப்பு
போடப்பட்டுள்ளது.படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் சுமார் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்படுள்ளனர். திரையரங்கிற்கு வரும் அனைவரும் பலத்த சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

துணை ஆணையர் சந்தீஸ் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Mall ஊழியர்களாக இருந்தாலும் பயங்கர சோதனைக்கு பிறகு அனுமதி வழங்கப்படுகிறது. மால்களில் ஒரு நுழைவாயில் அடைக்கப்பட்டு ஒரு நுழைவாயில் வாயிலாக மட்டுமே பொதுமக்கள் mall க்குள் அனுமதிக்கப்படுகின்றனர். திடீரென அதிக அளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பதற்றமடைந்துள்ளனர்.