இந்த நான்கு ஆண்டுகள் ஆன்லைன் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி வெளியானது! சென்னை ஐஐடி வெளியிட்ட அறிவிப்பு!
சென்னை ஐஐடி புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த பாடத்திட்டமானது தற்போது 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு இரவும் தெரிவித்துள்ளது மேலும் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் விண்ணப்பங்களை ஆதிதி மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது எந்த பாடப்பிரிவில் வேண்டுமானாலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் வயது வரம்பு எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது. மேலும் பத்தாம் வகுப்பில் ஆங்கிலம் , கணிதம் படித்த மாணவர்களில் யார் வேண்டுமானாலும் இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த விண்ணப்ப படிவமானது ஆன்லைன் மூலம் வரவேற்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான தமிழக மாணவர்கள் அதற்கு மற்றும் மராட்டியம் ,உத்திர பிரதேச மாநிலங்களை சேர்ந்தவர்களும் தற்போது வரை 13,000 மேற்பட்ட மாணவர்கள் இந்த பாடத்திட்டத்தில் சேர்ந்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது, மேலும் இந்தியாவில் உள்ள 111 நகரங்களில் உள்ள 116 தேர்வு மையங்களில் நேரடியாக தேர்வுகள் நடைபெறுகின்றன மேலும் ஐக்கிய அரபு,அமீரகம் , பக்ரைன், இலங்கை ஆகிய நாடுகளிலும் தேர்வு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.’
மேலும் இந்த பாடத்திட்டத்தில் ஐஐடி பிஎஸ்சி ப்ரோக்ராமிங், அண்ட் டேட்டா சயின்ஸ் ,பிஎஸ்சி டேட்டா சயின்ஸ், அண்ட் அப்ளிகேஷன் போன்ற 4 ஆண்டுகள் படிப்புக்காக தற்போது விண்ணப்ப படிவம் வரவேற்கப்பட்டுள்ளது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் அடுத்த மாதம் டேட்டா சயின்ஸ் பாடத்திட்டம் தொடங்கவுள்ள நிலையில் அதற்காக விண்ணப்ப படிவம் வரும் 19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் தகுதியுள்ள மற்றும் விருப்பம் உள்ள மாணவர்கள் https:/onlinedegree.iitm.ac.in என்ற அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் சென்னை ஐஐடி நிறுவனம் அந்த அறிக்கையில் கூறியுள்ளது