“யூனிபார்மை கழட்டிடுவேன்” சண்டை போட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி!

Photo of author

By Kowsalya

சில தினங்களுக்கு முன்பாக சென்னை காவல்துறையினரிடம் தகாத முறையில் பேசி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் பெண்ணின் முன் ஜாமின் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது என தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அந்த வழக்கறிஞரும் அந்த வழக்கறிஞரின் மகளும் காரில் ஊரடங்கிப் போனது சுற்றித் திரிந்ததால் காவல்துறையினர் மடக்கி அபராதம் விதித்த பொழுது, அந்த வழக்கறிஞரான தனுஜா ராஜா போலீசாரிடம் தகாத முறையில் பேசி வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

 

இந்த சம்பவத்தை நாம் அனைவரும் வீடியோவில் பார்த்திருப்போம். அந்த வீடியோவை காவல் துறை போலீசார் ஒருவர் எடுத்துள்ளார். இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து அந்த வழக்கறிஞர் என் மீது கொலை மிரட்டல் மற்றும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

 

இதனால் வழக்கறிஞரான தனுஜா ராஜா சென்னை முதன்மை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் நேற்று தாக்கல் செய்தார், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செல்வகுமார் இந்த முன் ஜாமீனை தள்ளுபடி செய்தார்.

 

இது பற்றி நீதிபதி செல்வகுமார் கூறியதாவது, இந்த பெண் வழக்கறிஞர் பொது இடங்களில் போலீசாரிடம் தகாத முறையில் நடந்து கொண்டது மக்களிடம் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் முன் ஜாமீன் வழங்கினால் இது ஒரு தவறான முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு பலரும் இது போன்ற காரியங்களில் ஈடுபடலாம் என்று கூறி பெண் வழக்கறிஞர் தனுஷ் ராஜா மற்றும் அவரது மகளின் முன் ஜாமீனையும் தள்ளுபடி செய்யுமாறு உத்தரவிட்டார்.