நடிகர் விஜயினுடைய விஜய் மக்கள் இயக்கம் தற்பொழுது தமிழக வெற்றிக் கழகம் அதிகாரப்பூர்வ கட்சியாக உருவாகி மக்களுக்கு செய்யக்கூடிய நன்மைகள் குறித்த ஆலோசனைக் கூட்டங்கள் மாநாடு போன்றவை வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது.
2026 முதலமைச்சர் வேட்பாளருக்கான தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் திமுக அதிமுக பாஜக போன்ற கட்சிகளை நேரடியாக எதிர்த்து நிற்கும் தமிழக வெற்றிக் கழகமானது நிச்சயமாக தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்குக் காரணமாக, கடந்த மாதம் முதல் மாநாட்டினை வெற்றிகரமாக நடத்தி முடித்த விஜய் தன்னுடைய அரசியல் எதிரியாக திமுகவை அறிவித்தார். அதாவது குடும்ப அரசியல் செய்யும் கட்சி எனவும் திராவிட மாடல் என்று சொல்லி அவர்கள் மக்களை ஏமாற்றுவதாகவும் விஜய் நேரடியாகவே தாக்கி பேசினார். அதன்பிறகு பாஜகவை கூட மறைமுகமாக அவர் விமர்சித்தார் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.
சமீபத்தில் நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டு அதிமுகவுடன் வருகிற தேர்தலில் கூட்டணி கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அதோடு தமிழக வெற்றி கழகத்தின் தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றும் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பது தான் தமிழக வெற்றிக்கழகத்தின் நோக்கம் என்றும் தெளிவாக தெரிவித்தனர்.
மேலும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் விஜய் தான் வெற்றி பெறுவார் என்றும் தமிழகத்தில் முக்கியமாக உள்ள 4 கட்சிகளையும் பின்னுக்கு தள்ளுவார் என்றும் ஒரு வீடியோவை எடிட் செய்து அவருடைய ரசிகர்கள் இணையதளத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர்.