முன்னணி நடிகர் விபசார வழக்கில் மாட்டிய விவகாரம்! அதிர்ச்சியில் திரையுலகினர்!

Photo of author

By Parthipan K

முன்னணி நடிகர் விபசார வழக்கில் மாட்டிய விவகாரம்! அதிர்ச்சியில் திரையுலகினர்!

போலீசாருக்கு புகார் ஒன்று கிடைத்தது அதில் பெங்களூருவில் சமூக வலைத்தளங்களில் இளம்பெண்கள் பதிவிடும் புகைப்படங்களை சிலர் போலியாக விபசார செயலி உருவாக்கி அதில் பகிர்ந்து இளைஞர்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர் என குறிப்பிடபட்டிருந்தது.

இதுகுறித்து பெங்களூரு சுத்தகுண்டே பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள் அந்த விசாரணையில்  மோசடியில் ஈடுபட்டுள்ள மஞ்சுநாத்,மல்லிகார்ஜுன்,அனுமேஷ்,ராஜேஷ்,மோகன்,மஞ்சுநாத் என்ற சஞ்சு ஆகிய ஆறு பேரை கைது செய்துள்ளனர்.கைதானவர்களில் மஞ்சுநாத் என்ற சஞ்சு சில கன்னட படங்களில் நடித்து இருப்பதும் தெரியவந்தது.மேலும் இவர்  தவறான வழியில் பணம் சம்பாதிக்கும் ஆசையில் நண்பர்களுடன் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் இவர்கள் இளம்பெண்களின் புகைப்படங்களை விபசார செயலியில் பதிவு செய்துள்ளனர்.அந்த செயலியின் மூலம் இளைஞர்கள் அவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர்களிடம் இருந்து பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.விபசார மோசடி வழக்கில் நடிகர் கைதாகி இருபது கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.