கடைக்கு சென்ற சிறுவனை இழுத்து சென்ற சிறுத்தை! தங்கையின் அலறல்!

0
165
The leopard that dragged the boy to the store! Sister's scream!
The leopard that dragged the boy to the store! Sister's scream!

கடைக்கு சென்ற சிறுவனை இழுத்து சென்ற சிறுத்தை! தங்கையின் அலறல்!

நேற்று மாலை வீட்டிற்கு அருகே இருந்த கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த 10 வயது சிறுவன் ஒருவனை சிறுத்தை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்து உத்தரகாண்டின் மாவட்ட வன அதிகாரி அளித்த தகவலின்பேரில் உத்தரகாண்ட் மாநிலத்தில், லாத்ரி கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவனும் அவனது தங்கையும் கடைக்குச் சென்றனர்.

சென்றுவிட்டு வீடு திரும்பும் போது எதிர்பாராதவிதமாக பின்னால் இருந்து பாய்ந்த சிறுத்தை சிறுவனை தாக்கியது. மேலும் பலத்த காயத்துடன் கிடந்த சிறுவனை அந்த சிறுத்தையோ  இழுத்துக் கொண்டு காட்டுக்குள் சென்று விட்டது. இதைப் பார்த்து பயந்தில் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தங்கை அழுதபடியே கிராமத்தில் உள்ளோரிடம் நடந்ததைச் சொன்னாள்.

விஷயம் அறிந்ததும் பதறிக் கொண்டு வந்த மக்கள் சிறுத்தை தாக்கிய இடத்தில் இருந்து சில அடிகள் தள்ளி சிறுவனின் உடல் இருப்பதை கண்டு பிடித்துஎடுத்தனர். பின் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் தாக்கப்பட்ட சிறுவனோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டான் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தற்போதுள்ள கொரோனா ஊரடங்கு காலத்தில், மக்கள் அனைவரும் வீட்டிலேயே உள்ளதன் காரணமாக கொடிய வன விலங்குகள் சுதந்திரமாக உலா வந்து கொண்டு இருக்கின்றன. திருப்பதி மலைப்பாதையில் கூட இதே போல் சிறுத்தை நடமாட்டத்தை கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள கண்டதாக கூறினார்கள். அதே போல் சில இடங்களில் யானைகளும், யானை கூட்டங்களும் கூட உலா வந்த வண்ணம் உள்ளன. மக்கள் நாம் வாழ காடுகளை அழித்து நமக்கு வீடுகளை அமைத்து கொள்கிறோம். ஆனால் வாயில்லாத ஜீவன்களான விலங்குகள் எங்கே போகும். அரசாங்கம் இதற்கு ஒரு நல்ல வழி செய்ய வேண்டும். அப்பாவி மக்களும் பாதிக்கப்படாமல் விலங்குகளும் பாதிக்கப்படாமல் ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

Previous articleகுழந்தை உடையில் குதூகலமாக இருக்கும் சமந்தா!! அருகில் இருப்பது யார் என்று தெரியுமா?!!
Next articleபாரத ரத்னா விருது கூட என் தந்தை கால் விரலுக்கு சமம்- பிரபல நடிகர் பேட்டியால் ரசிகர்கள் கண்டனம்!!