சின்ன கவுண்டர் கதாபாத்திரமானது என் மாமாவை மையப்படுத்தியது!! மனம் திறக்கும் இயக்குனர்!!

0
159
The little counter character centered on my uncle!! Mind opening director!!
The little counter character centered on my uncle!! Mind opening director!!

1992 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் பொங்கல் தினத்தன்று திரையிடப்பட்ட சின்ன கவுண்டர் திரைப்படம் ஆனது இன்று வரை எவர் கிரீன் திரைப்படமாக திகழ்ந்து வருகிறது.

இதில் விஜயகாந்த், சுகன்யா, கவுண்டமணி முதலியோர் நடித்து உள்ளனர். இதில் சின்ன கவுண்டர் ஆன விஜயகாந்துக்கு ஜோடியாக முதலில் ஸ்ரீதேவியை தான் தேர்ந்தெடுத்துள்ளனர். அவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி பட ஷூட்டிங்கில் பிஸியாக இருந்த காரணத்தால் நடிக்க மறுத்து விட்டாராம். அதன்பின் தான் இந்த வாய்ப்பானது சுகன்யா அவர்களுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தில் வரக்கூடிய சின்ன கவுண்டர் கதாபாத்திரத்தை இயக்குனர் ஆர் வி உதயகுமார், தனது மாமாவான அதியன் என்பவரை மையமாக வைத்து தான் உருவாக்கியுள்ளார்.

ஆனால் படம் முழுவதும் அவருடைய மாமாவின் கதையை வைத்து எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். பஞ்சாயத்து ஒரு இடத்தில் நடக்கிறது என்றால் அது எப்படி எல்லாம் நடக்கிறது பஞ்சாயத்து தலைவர் அங்கு என்னவெல்லாம் செய்கிறார் என்பதனை , பொள்ளாச்சி அருகே தக்கநாயக்கன்பாளையம் பஞ்சாயத்து தலைவராக இருந்த தனது மாமாவை மாடலாக வைத்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்.

Previous articleதனக்கு வாழ்வு கொடுத்த குருநாதருக்காக இசையமைத்த இளையராஜா!! பாடல்களுக்காகவே 100 நாட்கள் ஓடிய படம்!!
Next articleகருத்தம்மா திரைப்படத்திற்கு பின் 22 வருடங்கள் தோல்வியை மட்டுமே சந்தித்த பாரதிராஜா!! இதற்கான காரணம் இது தான்!!