அமெரிக்காவில் ஏற்பட்ட சூறாவளி காற்றால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் வீடுகள் அனைத்தும் சிதைந்துள்ளன. அங்கு அதிகமாக பனிப்பொழிவும், குளிரும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலோர மக்களுக்கு இதில் மிகுந்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
கடலோர மக்களுக்கு அன்றாட வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் கேள்விக்குறியாகியுள்ளது? இந்த சூறாவளி பாதிப்பினால் மேலும் 10 பேர் மிகுந்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களுக்கு உதவுவதற்காக அவசர உதவி மையங்கள் அனைத்தும் விரைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அமெரிக்க அரசு கடலோர மக்கள் மீட்புக்காக, நிவாரண உதவிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்நாட்டு அதிபர் இந்த சூழ்நிலையில் இருந்து நாங்கள் விரைவில் மீண்டு வருவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அந்நாட்டில் அதிக அளவிலான பனிப்பொழிவும், குளிர் காற்றும் நிலவி வருகின்ற இச்சூழலில், இந்த திடீர் சூறாவளி ஏற்பட்டுள்ளது. மேலும் அதிக அளவில் குளிரும், பனிப்பொழிவும் ஏற்பட்டதால் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.