இரு புறமும் இயக்கும் மிக நீளமான மற்றும் அனைத்து வசதிகளும் உள்ளேயே இருக்கும் அமெரிக்கன் ட்ரீம்!
உலகின் மிக நீளமான அமெரிக்கன் ட்ரீம் என்ற காரை மறு சீரமைக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமெரிக்கன் ட்ரீம் என்ற காரானது உலகின் மிக நீளமான கார் என்று கின்னஸ் புத்தகத்தில் 1986 ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது. இந்த கார் 100 அடி நீளம் கொண்டது அதாவது 30.5 மீட்டர் அளவுக்கு நீளமானது. மேலும் நாம் வீட்டுமனைகள் வாங்கும் முன் சொல்லப்படும் விளையாட்டு மைதானம், நீச்சல் குளம், ஹெலி பேட் போன்றவை அனைத்தும் இந்த வாகனத்தில் அடங்கி உள்ளதும் குறிப்பிடத் தக்கது.
இந்த கார் மிகவும் திறமை கொண்ட டிசைனரான ஜே ஓர்பெர்க் என்பவரால் உருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்தான் டெலிவிஷன் சீரிஸான கினைட்ல் பயன்படுத்தப்படும் கார்களையும் வடிவமைத்துள்ளார். பல ஹாலிவுட் படங்களில் வரும் நவீன ரக கார்கள் பலவற்றையும் வடிவமைத்த பெருமை இவரையே சேரும். மேலும் பல சிறப்பம்சங்களை உடைய அமெரிக்கன் ட்ரீம் என்ற காரை இவர் உருவாக்கிய பிறகு ஒரு காலகட்டத்தில் அதனை அனைவரும் கைவிட்டுவிட்டனர்.
அதன் காரணமாக முறையான பராமரிப்பின்றி பரிதாபமான நிலைக்கு அமெரிக்கன் ட்ரீம் சென்றது. மேலும் முறையான பராமரிப்பு இல்லாததால் சக்கரங்கள் மற்றும் காரின் ஜன்னல்கள் கடும் சேதமடைந்தன. மிகவும் பெருமை வாய்ந்த அந்த அமெரிக்க ட்ரீமை மீட்டெடுக்கும் முயற்சியில் தற்போது நியூயார்க்கின் நாசாவ் கவுண்டியில் உள்ள ஒரு தொழில்நுட்ப கற்பித்தல் அருங்காட்சியகமாக ஆட்டோசியம் ஈடுபட்டு உள்ளது.
அதன் பின் ஆகஸ்ட் 2019 இல் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன. இதன் காரணமாக அந்த நேரத்தில் கொரோனா நோய்த்தொற்று பறவிவந்த நிலையில் பணிகள் தடைப்பட்டிருந்தது. மறுசீரமைப்பு பணிகள் தற்போது மீண்டும் துவங்கி முழுவீச்சில் நடைபெற ஆரம்பித்துள்ளன.