மதுபானங்களின் விலை உயர்வு! அரசின் அதிரடி நடவடிக்கை!

0
99
Liquor prices rise! Government action!
Liquor prices rise! Government action!

மதுபானங்களின் விலை உயர்வு! அரசின் அதிரடி நடவடிக்கை!

இந்திய துணை கண்டத்தின் ஒரு பகுதி தான் இலங்கை.இது தென்கீழ் கரைக்கு அப்பால் இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ளது.இலங்கையை இந்து சமுத்திரத்தின் முத்து என்றும் கூறுவர்.ஏனென்றால் அங்குள்ள இயற்கையை ஒப்பிட்டு இவ்வாறு கூறிவந்தனர்.கொரோனா தொற்றானது அனைத்து நாடுகளையும் பெருமளவு பாதித்தது.அந்தவகையில் இலங்கையும் பெருமளவு பாதிப்பை சந்தித்தது.தற்பொழுது தான் உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா தொற்றை கட்டுபடுத்த தடுப்பூசி வரவழைக்கப்பட்டுள்ளது.

மக்கள் அனைவரும் அதனை செலுத்திக்கொண்டு வருகின்றனர்.அதேபோல தற்பொழுது இலங்கையிலும் கொரோனா தொற்றானது கட்டுக்குள் உள்ளது.தற்பொழுது இலங்கையில் நாடாளுமன்ற கூட்டுத்தொடர் நடைபெற்றது.அந்த கூட்டுத்தொடரில் அமைச்சர் பசில் ராஜபக்சே  2022 ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கையை தாக்கல் செய்தார்.அந்த அறிக்கையில் பல்வேறு நலத்திட்டங்களை கூறியிருந்தனர்.அதில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெரும் வயது 65 ஆக தற்பொழுது உயர்த்தியுள்ளார்.அதுமட்டுமின்றி அரசு ஆசிரியர்களின் சம்பளம் குறித்து தொடர்ந்து பல பிரச்சனைகள் நிலவி வருகிறது.

அவற்றை தீர்க்க சுமார் 30 ஆயிரம் மில்லியன் தொகையை ஒதுக்கீடு செய்வதாக கூறியுள்ளார்.அதுமட்டுமின்றி தற்பொழுது இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.அதனை மக்கள் மேல் திணிக்காமல் பல நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக கூறியுள்ளனர்.அதேபோல உற்பத்தி துறைக்கும் தடை இல்லாமல் வருமானம் ஈட்ட இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் என கூறியுள்ளார்.

மேலும் தொலைத்தொடர் பரிவர்த்தனை கட்டமைப்பு வசதியை விரிவாக்கம் செய்வதாகவும் கூறினார்.அதுமட்டுமின்றி அரசு சேவைகள் அனைத்தும் கூடிய விரைவில் கணினி மையமாக மாற்றப்படும் என கூறியுள்ளார்.அனைத்து பள்ளிகளிலும் இனையதள வசதி செய்து தரப்படும் என கூறினர்.சிகரெட் மற்றும் மதுபானகங்களின் விலை உயர்த்தப்படும் எனவும் தெரிவித்தார்.இந்த  அறிவிப்பால் மது பிரியர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.சிறு மற்றும் குறு நடுத்தர தொழில் முனைபவர்களுக்கு நிவாரணமாக நிதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.அதுமட்டுமின்றி விவசாயிகளுக்கு ரூ.10000 நிதி வழங்குவது குறித்தும் இந்த பட்ஜெட் தாக்குதலில் கூறியுள்ளனர்.