குறைந்த சம்பளம் வாங்கிய டாப் காமெடி நடிகர்!! ரசிகர்கள்  இடையே அதிர்ச்சி!! 

0
123
The lowest paid top comedy actor!! Shock among fans!!
The lowest paid top comedy actor!! Shock among fans!!

குறைந்த சம்பளம் வாங்கிய டாப் காமெடி நடிகர்!! ரசிகர்கள்  இடையே அதிர்ச்சி!!

தேசிய விருது பெற்ற மண்டேலா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர்  மடோன் அஷ்வின் தற்போது  மாவீரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார்.

இவர் மட்டுமின்றி யோகி பாபு, சரிதா , டைரக்டர் மிஷ்கின்   ஆகிய நடிகர்களும்  நடித்து உள்ளார்கள். இந்த படத்திலிருந்து முதல் பாடல் வெளிவந்து நல்ல வரவேற்பைப்பெற்றது. முதல் பாடலை  பரத் சங்கர் இசையமைப்பில் அனிருத் பாடியுள்ளார். இந்த படத்தில் இரண்டாம் பாடலை சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து பாடியுள்ளார்கள்.

ஜூலை14 ஆம் தேதி வெளிவந்தது. இந்த படத்தை பார்த்து விட்டு ரசிகர்கள் அவர்களின் கருத்துகளை கூறினார்கள். இந்த படத்தில் முக்கிய கதை தொடை நடுங்கியாக இருக்கும் ஒருவன் எப்படி மாவீரனாக மறுக்கிறான் என்பது எந்த படத்தின் கதை ஆகும். இந்த படத்தில் பாதி கதை விறுவிறுப்பு நிறைந்தும், அதிக நகைச்சுவை காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

இந்த படத்தில் மிஷ்கின் வில்லனாக நடித்துள்ளார். இந்த படம் ரசிக்கும் வகையில் உள்ளது. இந்த படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பையும் பெற்றது. மேலும் இந்த படத்தில் சிவகர்த்திகேயன் யோகிபாபு கம்போ சிறப்பாக அமைந்தது. இந்த படத்தில் யோகி பாபு காட்சிகள் ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் இந்த படத்திற்காக யோகி பாபு வாங்கிய ஊதியம் 30 லட்சம் ரூபாய் என்று தகவல் வந்துள்ளது. இந்த செய்தி ரசிகர்கள் இடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மேலும்  நல்ல காமெடி நடிகராக வலம் வரும் இவருக்கு குறைந்த சம்பளம் என்று பலர் விமர்சித்து வருகிறார்கள்.

Previous articleபிரபல கவிஞரின் தங்கை மகன் திடீர் மரணம்!! இரங்கல் தெரிவித்த அரசியல் பிரபலங்கள்!!
Next articleசேர்ந்து வாழ மறுத்த மனைவி!! நடு ரோட்டில் கணவர் செய்த கொடூர செயல்!!