ஆடுற மாட்ட ஆடி கறப்பவர் பாடுற மாட்ட பாடி கறப்பவர் ஸ்டாலின் – அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு..
ஆடுற மாட்ட ஆடி கறந்து, பாடுற மாட்ட பாடி கறந்து அரசாங்கத்தின் திட்டம் என்கின்ற பாலை இல்லாதோர் இல்லங்களுக்கு சரியாக முறையாக சேர்க்கின்ற நிர்வாகத்தின் பெயர் ஸ்டாலினிசம் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசினார்.
சட்டப்பேரவையில் பதிலுரையின் போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், பாவேந்தர் பாரதிதாசன் பாணியில் உலக அரசியல் பற்றி சொல்ல வேண்டும் என்று சொன்னால், இரண்டு பசு மாடுகளுடைய உரிமையாளர் பசு மாடுகளை தானே வைத்துக் கொண்டு பாலை பயன்படுத்தி வந்தால் அது Democratism .
இரண்டு பசு மாடுகளின் உரிமையாளர் ஒன்றைத் தான் வைத்துக்கொண்டு மற்றொன்றை இல்லாதவருக்கு வழங்கினால் அது Socialism.
இரண்டு பசுமாடுகளுடைய உரிமையாளர் ஒரு பசுமாட்டை விற்று அதற்கு பதில் ஒரு காளைமாடு வாங்கி அதை மிகப்பெரிய பண்ணையாக உருவாக்கி ஆட்களை பணியமர்த்தி செய்கின்ற நிர்வாகத்தின் பெயர் Capitalism
இரண்டு பசுமாடுகளையும் அரசாங்கத்திடம் வழங்கிவிட்டு பாலை மட்டும் இலவசமாக பெற்றுக் கொண்டால் அது கம்யூனிசம்
இரண்டு பசு மாடுகளையும் அரசாங்கம் உரிமையாளர்களிடமிருந்து பிடுங்கிக் கொண்டு அந்த உரிமையாளரிடமே அந்தப் பாலை விற்றால் அது பாசிசம்
இரண்டு பசு மாடுகளையும் அரசாங்கம் பிடுங்கிக் கொண்டு உரிமையாளரை சுட்டு கொன்று விட்டால் அதன் நாசிசம்
ஆடுற மாட்ட ஆடி கறக்கணும் பாடுற மாட்ட பாடிகறந்து அரசாங்கத்தின் திட்டம் என்கின்ற பாலை இல்லாதோர் இல்லங்களுக்கு சரியாக முறையாக சேர்க்கின்ற நிர்வாகத்தின் பெயர் ஸ்டாலினிசம் என கூறினார்.
விசுவல் உள்ளது- அன்பில் மகேஸ் பேச்சின் துவக்கத்தில் வரும்