தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த மாமனிதர்! சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் புகைப்படம்!

Photo of author

By Pavithra

தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த மாமனிதர்! சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் புகைப்படம்!

Pavithra

தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த மாமனிதர்! சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் புகைப்படம்!

வழக்கமாக இரங்கல் கடிதம் அல்லது கண்ணீர் அஞ்சலி போஸ்டர் இறந்தவர்களுக்காக அவரது உறவினர்கள் அல்லது நண்பர்கள் வைப்பதுதான் வழக்கம்.ஆனால்
சென்னையை சேர்ந்த 72 வயது மதிக்கத்தக்க கார் ரேலி ரேஸர் ஏஜ்ஜி கே.உமாமகேஷ் என்பவர்,தனக்கு தானே இரங்கல் கடிதம் எழுதிக்கொண்டுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதோடு நெட்டிசன்கள் மத்தியில் விவாத பொருளாகவும் தற்போது மாறியுள்ளது.

கடந்த 16ஆம் தேதியன்று உயிரிழந்த உமாமகேஷ்,அவர் இறப்பதற்கு முன்னதாக தன் கையால் எழுதிய இரங்கல் கடிதத்தை தனது உறவினர்களிடம் ஒப்படைத்து உள்ளார்.இதன்பிறகு அவரது மறைவையடுத்து உறவினர்களும் பத்திரிகை ஒன்றில் சுய இரங்கல் அறிவிப்பு என, வெளியிட்டனர்.தற்போது இதுதான் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.

https://twitter.com/MjaVinod/status/1317381910759305216?s=19

அந்த இரங்கல் கடிதத்தில்
உமாமகேஷ் தெரிவித்துள்ளதவாது, அன்பான நண்பர்களே, பகைவர்களே, இரண்டுக்கும் மத்தியில் உள்ளவர்களே என்னுடைய அற்புதமான வாழ்நாளில் பங்கெடுத்துக் கொண்டமைக்கு நன்றி என்றும்,என்னுடைய அற்புதமான வாழ்நாளில் பங்கெடுத்துக் கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி என்றும்,எனது பார்ட்டி முடிந்து விட்டது என்றும் இதில் யாரையும் ஹேங் ஓவர் நிலையில் நான் விட்டுச் செல்லவில்லை என்றும் நான் நம்புகிறேன் என அவர் அந்த இரங்கல் கடிதத்தில் எழுதியுள்ளார்.