மது அருந்த பணம் தராத மனைவி கோபத்தில் கொத்தனார் செய்த அதிர்ச்சி காரியம்! 

0
477

மது அருந்த பணம் தராத மனைவி கோபத்தில் கொத்தனார் செய்த அதிர்ச்சி காரியம்! 

குடிப்பதற்கு பணம் கேட்டு மனைவி மறுத்ததால் கோபத்தில் கொத்தனார் செய்த காரியம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் வயது- (30). இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். வெங்கடேசன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்.

இந்நிலையில் வெங்கடேசன் நேற்று குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு அவரது மனைவி மறுத்து வேலைக்கு செல்வதற்கு கேட்டால் கூட பணம் தருவேன். ஆனால் குடிப்பதற்கு கட்டாயம் பணம் தர மாட்டேன் என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் கடும் கோபம் அடைந்த வெங்கடேசன் தனது பைக்கில் இருந்த பெட்ரோல் பிடித்து தலையில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்து அவரது மனைவி சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். பின்னர் அவர்கள் ஓடி வந்து தீயை அணைத்து வெங்கடேசனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வெங்கடேசன் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Previous articleசிதைந்து போன துருக்கி மற்றும் சிரியா இந்திய மீட்பு படைகள் கிளம்பின! 
Next articleநிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கி சிரியா- 4300 பேர் பரிதாப பலி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here