சண்டையில் முடிந்த பெங்களூரு மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டி!! கோஹ்லி மற்றும் கம்பீர் தொடர்ந்து மற்றொரு வீரருக்கு அபராதம்!!
ஐபிஎல் என்று அழைக்கப்படும் உள்ளூர் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சென்னை, பொங்களூரு, மும்பை, லக்னோ, குஜராத் உள்பட பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றது.
நேற்று பாஃப் டு பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களை சேர்த்தது. முதல் இன்னிங்ஸில் அபாரமாக பந்து வீசிய லக்னோ அணி நவீன் உல் ஹக் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 127 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய லக்னோ அணி பெங்களூரு அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்து 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதற்கு மத்தியில் இந்த போட்டியில் லக்னோ அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அவர்களுக்கும் பெங்களூரு அணியின் வீரர் விராட் கோஹ்லி அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் இந்த போட்டியில் சிறு பதற்றம் ஏற்பட்டது. இதற்கு மத்தியில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஏற்பட்ட இந்த பிரச்சனையின் காரணமாக பெங்களூரு அணியின் வீரர் விராட் கோஹ்லி அவர்களுக்கும் லக்னோ அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அவர்களுக்கும் 100% சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமில்லாமல் பெங்களூரு அணியின் வீரர் விராட் கோஹ்லி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட லக்னோ அணியின் வீரர் நவீன் உல் ஹக் அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. லக்னோ அணியின் வீரர் நவீன் உல் ஹக் அவர்களுக்கு 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.