தமிழ்நாட்டை தமிழகம் என்று பெயர் மாற்றிய விவகாரம்!! ஆளுநருக்கு நன்றி கூறிய திமுக நிர்வாகி!!
சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்ற முடிந்தது முதல் தற்பொழுது வரை அங்கு நிலவிய செயல்பாடு குறித்து பரபரப்பாக பேசப்பட்டது தான் வருகிறது. ஆளுநர் ரவி அரசாங்கம் அளித்த குறிப்பில் உள்ளதை முழுமையாக கூறாமல் சில வார்த்தைகளை தவிர்த்து பேசியதால் அடுத்தடுத்து சர்ச்சை கிளம்பியது. அவர் உரையாற்றும் வரை அமைதி கொண்ட முதல்வர் உரையாற்றி முடிந்ததும் நடுவில் ஆளுநர் செய்த செயல் குறித்து நேரடியாக விமர்சனம் செய்ததை ஒட்டி அவையை விட்டு ஆர் என் ரவி வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து ஆளுநர் தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் இன்று மாற்ற நினைக்கிறார் என அடுத்த சர்ச்சை உருவானது. அதன் முதல் படியாக வருடம் தோறும் பொங்கல் திருவிழா அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் இன்று குறிப்பிட்டு வந்திருந்த நிலையில் நடப்பாண்டில் தமிழக ஆளுநர் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை ஆளுநர் எவ்வாறு மாற்றலாம் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி ஆளுநருக்கு நன்றி தெரிவித்துள்ளதும் தற்பொழுது அரசியல் வட்டாரங்களில் மேலும் சூட்டை கிளப்பி உள்ளது. ஆளுநருக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, தற்பொழுது ஆளுநர் கூறிய தமிழகம் மற்றும் தமிழ்நாடு என்ற சர்ச்சையால் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம்.
எவ்வாறு 1965 ஆம் ஆண்டு அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஹிந்தியை ஒழிக என்று முழக்கமிட்டார்களோ அதே போல தற்போது தமிழ் வாழ்க தமிழ்நாடு வாழ்க என்று முழுக்க விட ஆரம்பித்துள்ளோம். இதற்கு முழு காரணம் ஆளுநர் ஆர் என் ரவி மட்டுமே. இவ்வாறு ஆளுநர் கிளப்பே சர்ச்சைக்கு திமுக உறுப்பினர் நன்றி செலுத்தியுள்ளது அரசியல் சுற்றுவட்டாரத்தில் தற்பொழுது பேச்சு பொருளாக மாறி உள்ளது.