தவெக-வுடன் கூட்டணி என பொய் தகவல் பரப்பும் ஊடகம்!! ஆவேசத்தில் விசிக தலைவர்!!

Photo of author

By Vinoth

புதுவை: கம்பன் கலையரங்கம் முகமது ஜின்னா ‘நோபல் ஜர்னி’. விசிக, தவெக, அதிமுக, திமுக கூட்டணி இல்லை.

புதுவையில் நேற்று மாலை (ஞாயிற்றுக்கிழமை  17/11/2024) கம்பன் கலையரங்கத்தில் முகமது ஜின்னா எழுதிய நோபல் ஜர்னி என்ற நூல் வெளியிட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாளவளவன் கலந்து கொண்டார். நூல் வெளியிட்டு விழாவில் தனது கட்சிக்கு அவதூறுகள் பொய் வீண் விளம்பரம் செய்தது வருகின்றனர். அதில் குறிப்பாக  நாம் என்ன முடிவெடுக்கப்போகிறோம் என்ற விவாதங்கள் நடக்கின்றன. எதிர்மறையான, நேர்மறையான கருத்துகள் நம்மைப்பற்றி பேசும் அளவுக்கு நாம் வலிமை பெற்றிருக்கிறோம்.

அதனை இன்னும் வலிமையாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என கூறினார். அவர் நேரடியாக கூறியது என்னவென்றல் நேற்று மழையில் இன்று முளைத்த காளன் அவர்கள் கூட நான் கூட்டணியில் இணையமாட்டேன் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறுவது போன்ற தோற்றத்தை சிலர் திட்டமிட்டு உருவாக்குகின்றனர். அது உண்மையல்ல என்றார்.

இந்த பொய்யான தகவல்கள் சில ஊடகங்கள் பரப்பி வருகிறது எதற்கும் ன அஞ்சமாட்டேன் எப்போதும் நான் இந்திய கூட்டணியில் மட்டும் தான் இருப்பேன். இந்த இந்தியா கூட்டணியை மேலும் பலபடுத்த என்னால் என்ன செய்ய முடியும் அனைத்தும் ன செய்வேன் என்று கூறினார் விசிக தலைவர் திருமாவளவன்.  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை உருவாக்கியதில் விடுதலை சிறுத்தைகளுக்கும் பங்களிப்பு உண்டு என்றார்.