நெட்டிசன்கள் செய்த குளறுபடி!! பதிலடி கொடுத்த இயக்குனர்!

Photo of author

By Vijay

நெட்டிசன்கள் செய்த குளறுபடி!! பதிலடி கொடுத்த இயக்குனர்!

Vijay

Updated on:

The mess made by netizens!! Producer who responded!

நெட்டிசன்கள் செய்த குளறுபடி!! பதிலடி கொடுத்த இயக்குனர்!

தமிழக சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்னர் நடிகர், படத்தொகுப்பாளர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமையோடு விளங்கிவரும் விஜய் ஆண்டனி தற்போது தீவிரமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவரது நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்று பிச்சைக்காரன் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது படபிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தின் சண்டைக் காட்சி ஒன்று மலேசியாவில் கொழும்பூரில் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வந்தது அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு விஜய் ஆண்டனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் விஜய் ஆண்டனிக்கு அறுவை சிகிச்சை செய்யப் போவதாகவும் சுயநினைவு இழந்த நிலையில் உள்ளதாகவும்  பரவி வருகின்ற செய்தி பொய்யானது என்று இயக்குனர் சுசீந்திரன் விஜய் ஆண்டனியின் ரசிகர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே விஜய் ஆண்டனி சென்னை வந்துவிட்டார் டாக்டர்களின் அறிவுரையின்படி இரண்டு மூன்று வாரங்கள் ஓய்வெடுக்க போவதாகவும் மற்றும் கூடிய விரைவில் தன் ரசிகர்களுடன் வீடியோ மூலம் பேசுவதாகவும் குறிப்பிட்டிருந்தார் மேலும் இது போன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்திருந்தார்.