உதவி அளிக்க சென்ற ராணுவ ஹெலிகாப்டர் திடீர் விபத்து !..நடந்தது என்ன? ஹெலிகாப்டரை இயக்கிய வீரர்கள் நிலை?..
கராச்சியில் பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த மாதத்திலிருந்து விடாது மழை பெய்து வருகிறது. இதனால் மாகாணத்தில் பத்தாயிரம் வீடுகள் மழை நீரினால் மூழ்கியது. 1 லட்சத்து 97 ஆயிரத்து 930 பயிர் நிலங்கள் மற்றும் 565 கி.மீ. சாலைகள் இந்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 712 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
இதுவரை பலி எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியது.இதனை மாகாண முதன்மை செயலாளர் அப்துல் அஜீஸ் உகைலி உறுதிப்படுத்தியுள்ளார்.தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பரவலாக பாதிக்கப்பட்டுவுள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் முற்றிலும் அழிந்து நாசமகியன. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளின்றி தவித்து வருகின்றனர்.
மேலும் பலூசிஸ்தான் மாகாணத்தில் பெய்து வரும் தொடர் காண மழையால் பல அணைகளில் நீர் நிரம்பி வருகிறது.கனமழையால் ஏழு அணைகள் உடைந்து விட்டன என மாகாண பேரிடர் மேலாண் கழகம் கூறியிருக்கின்றார்கள்.பாகிஸ்தானில் பலூசிஸ்தான் சிந்து, கில்கிட்-கைபர் பக்துன்க்வா ஆகிய மாகாணங்களில் மக்கள் வெள்ளத்தில் சிக்கி பல்லாயிரக்கணக்கனோர் தவித்து வருகின்றனர்.
எனவே மக்களை மீட்க மற்றும் நிவாரண பணிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஈடுப்பட்டு வருகிறார்கள்.இதன் ஒரு பகுதியாக பலூசிஸ்தானின் லாஸ்பெலா பகுதியில் வெள்ள நிவாரண பணிகளை பார்வையிட ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று அங்கு சென்றுள்ளது.எனவே பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் மாயமானதாகவும் அந்த ஹெலிகாப்டரை தேடும் பணி நடந்து வருவதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால் பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் வெடித்து விபத்திற்குள்ளாகி இருக்கிறது என தகவல்கள் பரவி வருகின்றது.இது பற்றி பலூசிஸ்தான் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பில் காணாமல் போன ஹெலிகாப்டர் வின்தர் மற்றும் சஸ்சி புன்னு ஆலயம் பகுதிகளுக்கு இடையே வெடித்துள்ளது எனவும் அதில் லெப்டினன்ட் ஜெனரல் சர்ப்ராஸ் அலி மற்றும் 5 வீரர்கள் என மொத்தம் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 6 பேர் பயணித்து இருகின்றனர்.
எனினும் ராணுவ ஹெலிகாப்டர் காணாமல் போன விஷயம் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், விபத்திற்குள்ளானது பற்றி பாகிஸ்தான் ராணுவம் எவ்வித தகவலையும் உறுதிப்படுத்தவில்லை என தெரிகிறது.