ADMK DMK: ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி சேர்ந்தவர்கள் மாறி மாறி விமர்சனம் செய்வதையே வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவிலிருந்து வெளியேறி தற்போது திமுகவில் சட்டத்துறை அமைச்சராக இருந்து வந்த ரகுபதி குறித்து கடுமையாக சாடி பேசியுள்ளார். இதன் ஆரம்ப கட்டமாக ரகுபதி தான் எடப்பாடி க்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார். அதாவது இந்தியாவிலேயே அதிகளவு பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள் என்றால் அது தமிழகத்தில் தான்.
அதுமட்டுமின்றி கல்லூரியில் படிக்கும் பெண்களும் மற்ற மாநிலத்தை காட்டிலும் தமிழகத்தில் தான் அதிகளவில் காணப்படுகின்றனர். இதெல்லாம் எடப்பாடிக்கு தெரியாது. அவர் தூங்கிக் கொண்டிருக்கிறார் தட்டி எழுப்பி அவரிடம் இதைப் பற்றி கூறுங்கள் என்று விமர்சித்திருந்தார். ரகுபதி இப்படி விமர்சித்ததற்கு எடப்பாடி நேரடியாகவே தக்க பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார். அதில், நான் தூங்குவதாக ரகுபதி கூறுகிறார்.
ஆனால் நான் விழித்துக் கொண்டிருப்பதால் தான் பொறுத்துக் கொள்ள முடியாமல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன். அதை பொறுக்க முடியாமல் தான் ரகுபதி இப்படி கூறுகிறார். நமது தமிழ்நாட்டின் முதல்வர் என தொடங்கி, காவல் அதிகாரிகள், அரசு உள்ளிட்ட அனைவரும் தூங்கி தான் கொண்டிருக்கிறார்கள். அதிலும் கும்பகர்ண தூக்கம் என்றால் அது ரகுபதி தான். தற்போது வரை திமுகவின் கொத்தடிமைகளில் ஒருவர் ரகுபதி உள்ளார். அவரை முதன்முதலாக அமைச்சராக்கி பார்த்ததே அதிமுகவும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களும் நான்.
அந்த நன்றியை மறந்து விட்டு தற்போது திமுகவிற்கு அடிபணிந்து குரல் கொடுத்து வருகிறார். திமுக எப்போது ஆட்சிக்கு வந்ததோ அப்போதிலிருந்து சட்ட ஒழுங்கு சீர்கேடு அடைந்து விட்டது தொடர்ந்து கொலை, கொள்ளை, பாலியல் வழக்குகள் தான் அதிகரிக்கின்றன. இப்படி கொத்தடிமை என்று எடப்பாடி பழனிச்சாமி சொன்ன ஒரு சில கணமே அவரது இலக்கா மாற்றமடைந்துவிட்டது என்ற செய்தி வெளியானது. அதாவது துரைமுருகன் பொறுப்பிலிருந்த கனிம வளத்துறை தற்போது ரகுபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
ரகுபதி பார்த்து வந்த சட்டத்துறை துரைமுருகனுக்கு சென்றுள்ளது. இதே போல செந்தில் பாலாஜியின் மின்சார துறையானது அமைச்சர் சிவசங்கரிடமும், மேலும் அவர் வசம் இருந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை முத்துசாமிக்கும் மாற்றியுள்ளனர். அதேபோல அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பொன்முடியிடம் இருந்த துறையும், மனோ தங்கராஜுக்கு ராஜ கண்ணப்பிடமிருந்த பால் வளத்துறையும் ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.